மாநிலங்களவையில் 200 தடவை குரல் வாக்கெடுப்பு நடந்த மசோதா

புதுடெல்லி, 
மாநிலங்களவையில், பட்டய கணக்காளர், செலவுகள் மற்றும் பணி கணக்காளர்கள், கம்பெனி செயலாளர்கள் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது. அம்மசோதா, 106 உட்பிரிவுகளை கொண்டது. ஒவ்வொரு உட்பிரிவுக்கும் ஒப்புதல் பெறும்வகையில், ஒவ்வொரு உட்பிரிவையும், அதற்கு உறுப்பினர்கள் கொண்டு வந்த திருத்தங்களையும் குரல் வாக்கெடுப்புக்கு விட்டனர்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு உறுப்பினர் ஜான் பிரிட்டாஸ் மட்டும் திருத்தங்களுக்காக 163 நோட்டீஸ்கள் கொடுத்திருந்தார். பெரும்பாலான திருத்தங்களை அவர் முன்வைத்தார். இந்திய கம்யூனிஸ்டு உறுப்பினர் பினாய் விஸ்வமும் சில திருத்தங்களை கொண்டு வந்தார். எனவே, உட்பிரிவுகள், திருத்தங்கள் என 200-க்கு மேற்பட்ட தடவை குரல் வாக்கெடுப்பு நடத்தி, மசோதா நிறைவேற்றப்பட்டது. இதற்கு 30 நிமிடத்துக்கு மேல் ஆனது.
ஒவ்வொரு உட்பிரிவையும், திருத்தங்களையும் வாசித்து வாசித்து சபை துணைத்தலைவர் ஹரிவன்ஷ் களைத்து போனார். நீண்ட நாட்களுக்கு பிறகு, ஏராளமான உட்பிரிவுகளை கொண்ட மசோதா நிறைவேற்றப்பட்டு இருப்பதாக மாநிலங்களவை செயலகம் தெரிவித்தது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.