மானிய கோரிக்கைகள்: தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை தொடங்குகிறது….

சென்னை: தமிழக சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் நாளை தொடங்குகிறது. இந்த கூட்டத்தொடரில் சொத்து வரி உயர்வு, தங்க நகை கடன் தள்ளுபடி போன்ற விவாதங்கள் அனல்பறக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி முடிவடைந்தது. 6 நாட்கள் மட்டுமே நடைபெற்ற பட்ஜெட் கூட்டத் தொடரின்போது, 18, 19தேதிகள் நிதி மற்றும் வேளாண்  பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.  பின்னர் 21ந்தேதி முதல்  24-ந்தேதி வரை விவாதம் நடந்தது. அமைச்சர்கள் பதிலுரைக்கு பிறகு சட்டசபை கூட்டம் ஒத்திவைக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து பட்ஜெட் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்காக ஏப்ரல் 6ந்தேதி பட்ஜெட் கூட்டத்தொடரின் 2வது அமர்வு தொடங்கும் என சபாநாயகர் அப்பாவு அறிவித்திருந்தார். அதன்படி நாளை மீண்டும் சட்டப்பேரவை கூடுகிறது.

முதல் நாளான நாளை (புதன்கிழமை) நீர்வளத்துறை மானியக் கோரிக்கை தாக்கல் செய்யப்படுகிறது. இதில் தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட சட்டமன்ற கட்சிகளின் உறுப்பினர்கள் பேசுவார்கள். இறுதியில் அமைச்சர் துரைமுருகன் பதில் அளித்து பேசுவார். அதைத் தொடர்ந்து, ஒவ்வொரு நாளும் துறை ரீதியாக மானியக் கோரிக்கைகள் மீதும் விவாதம் நடைபெறும்.

இடையில், துறை சார்பாக 110 விதியின் கீழ் அவற்றை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்புகளையும் வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த கூட்டத்தில்,  சொத்து வரி உயர்வு, நீட் தேர்வு, சட்டம்-ஒழுங்கு பிரச்சனைகளை எழுப்ப எதிர்க்கட்சிகளான  அ.தி.மு.க., பா.ஜனதா  திட்டமிட்டுள்ளன. எனவே தினமும் மானிய கோரிக்கையின் போது அனல் பறக்கும் விவாதங்கள் நடைபெறும்.

இந்த சட்டப்பேரவை சட்டசபை கூட்டம் மதியம் 2 மணி வரை நடைபெறும் என்பதால் கோட்டையில் பாதுகாப்பு ஏற்பாடுகளும் அதிகரிக்கப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை தொடர் படிப்படியாக முழுமையாக ஒளிபரப்பப்படும்!  சபாநாயகர்

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.