மின்னணு துறையில் வெளிநாட்டு நேரடி முதலீடு செய்ய சிறந்த இடங்கள் குறித்து எப்.டி.ஐ. பென்ச்மார்க் நிறுவனம் ஆய்வு நடத்தியது.
இந்த ஆய்வில் முதல் 20 இடங்களில் துருக்கியின் இஸ்தான்புல் தவிர மற்ற அனைத்து இடங்களும் ஆசியாவில் உள்ளது குறிப்பிடத்தக்கது.
தென் கொரியாவின் சியோல், ஜப்பானின் டோக்கியோ, சீனாவின் ஷென்ஜென், குவாங்ஹு, ஆகிய இடங்கள் இடம்பெற்றுள்ளது.
50 பேர் கொண்ட எலக்ட்ரானிக்ஸ் ஆர் & டி மையத்தை நிர்வகிக்க உலகின் 100 நகரங்களில் ஆகும் செலவினங்கள் குறித்த ஆய்வின் அடிப்படையில், மிகவும் குறைந்த செலவில் நிர்வகிக்க கூடிய நகரமாக சென்னை முதலிடத்தில் உள்ளது.
சென்னையில் மின்னணு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு மையத்தை நிர்வகிக்க ஆண்டுக்கு சுமார் 9.4 கோடி ரூபாய் ஆகும் என்று கணக்கிடப்பட்டுள்ளது.
மேலும், மற்ற நகரங்களுடன் ஒப்பிடுகையில் தென் கொரியாவின் சியோல் நகருக்கு அடுத்தபடியாக எலக்ட்ரானிக்ஸ் ஆர் & டி நடவடிக்கைகளுக்கு உலகின் இரண்டாவது சிறந்த இடமாக சென்னை குறிப்பிடப்பட்டுள்ளது.