மாநாடு, மரைக்காயர், ஹிருதயம் என தமிழ், மலையாள திரையுலகில் கல்யாணி பிரியதர்ஷன் வளர்ந்துவரும் நடிகை. இவரது இன்னொரு பக்கம் சுவாரஸ்யமானது.
கல்யாணி முதன்முதலாக சினிமா துறைக்குள் வந்தது தயாரிப்பு வடிவமைப்புக்காக. ஹிந்தியில் ‘கிரிஷ் 3’ படத்தில் சாபு சிரிலுக்கு உதவியாளராகத் தயாரிப்பு வடிவமைப்பில் பணியாற்றினார்.
தமிழில் விக்ரம், நயன்தாரா நடித்த ‘இருமுகன்’ படத்திலும் தயாரிப்பு வடிவமைப்பு உதவியாளராக கல்யாணி பணியாற்றியுள்ளார்.
சினிமாவில் கேமரா பின்னிருந்தவர் கேமராவுக்கு முன்பு வந்தது ‘Hello’ என்னும் தெலுங்குப் படத்தில்தான். அகில் அக்கினேனி உடன் இந்தப் படத்தில் நடித்தார்.
கல்யாணி பிரியுதர்ஷன் பிறந்தது சென்னையில்தான். பள்ளிப்படிப்பு லேடி ஆண்டாள் பள்ளியில்.
அதன் பிறகு சிங்கப்பூர், அமெரிக்கா எனப் பறந்தவர் கட்டட வடிவமைப்புத் துறையில் பட்டம் பெற்றிருக்கிறார்.
தெலுங்கில் மூன்று படம், 2019-ல் சிவகார்த்திகேயன் உடன் ‘ஹீரோ’ படம் என நான்கு படங்களுக்குப் பிறகுதான் மலையாள படங்களுக்கே சென்றார் கல்யாணி.
2020-ல் துல்கர் சல்மானுடன் நடித்த ‘வரனே அவசியமுண்டு’ ஓடிடி தளத்தில் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது.
கல்யாணியின் தந்தை பிரியதர்ஷன் இந்தியாவின் முக்கிய இயக்குநர்களில் ஒருவர். 95 படங்களுக்கு மேல் மலையாளம், தமிழ், இந்தி ஆகிய மொழிகளில் எடுத்துள்ளார். 2008-ல் பிரகாஷ்ராஜ் நடிப்பில் உருவான ‘காஞ்சிவரம்’ படம் பிரியதர்ஷன் எடுத்தது.
அம்மா லிஸியும் மலையாள நடிகை. திரைத்துறை பின்னணி இருந்தும் கல்யாணிக்கு நடிப்பில் ஆர்வம் இருந்ததே இல்லை. பள்ளிப் பருவத்தில் கல்யாணி கொஞ்சம் பருமனாக இருப்பாராம்.
இன்றைக்கு இந்த ‘மெஹருசைலா அழகி’க்கு பிறந்தநாள். ஹேப்பி பர்த்டே, கல்யாணி!