வாஷிங்டன்: மல்டிமீடியா மெசேஜிங் செயலியான ஸ்னாப்சாட் தளத்தில் பயனர்கள் யூடியூப் வீடியோக்களை சுலபமாக பகிரும் புதிய அம்சம் அறிமுகமாகியுள்ளது. இதன் மூலம் யூடியூப் வீடியோக்களை பயனர்கள் தங்களது நண்பர்களுடன் நேரடியாக பகிர்ந்து கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்ட்ராய்டு மற்றும் ஆப்பிள் ஐஓஎஸ் இயங்குதளம் கொண்ட போன்களை பயன்படுத்தி வரும் ஸ்னாப்சாட் பயனர்கள் இந்த அம்சத்தை பயன்படுத்தலாம். தானியங்கு முறை ஸ்டிக்கர்கள் மூலம் இதனை சுலபமாக்கி உள்ளது அந்நிறுவனம். ஒவ்வொரு மாதமும் சுமார் 2 பில்லியன் லாக்-இன் பயனர்கள் யூடியூப் தளத்தை பயன்படுத்தி வருவதாகவும். ஸ்னாப்சாட்டில் இணைக்கப்பட்டுள்ள இந்த புதிய அம்சத்தின் மூலம் ஏற்கெனவே நண்பர்களுடன் சாட் செய்து வரும் பயனர்கள் இனி சுலபமாக தங்களுக்கு பிடித்த யூடியூப் கிளிப்களை நண்பர்களுடன் பகிரலாம் என ஸ்னாப்சாட் தெரிவித்துள்ளது.
ஸ்னாப்சாட் ஸ்டோரிஸ் மற்றும் அதன் ஸ்னாப்களுடன் யூடியூப் இணைப்புகள் விஷுவலாக பகிரப்படுவது இதுவே முதல் முறை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், யூடியூப் ஸ்டிக்கர்கள் மூலம் பயனர்கள் யூடியூப் அப்ளிகேஷன் அல்லது அவர்களுக்கு பிடித்த பிரவுசர்களில் வீடியோக்களை எளிதில் பார்க்கலாம் எனவும் சொல்லப்பட்டுள்ளது.
ஸ்னாப்சாட்டில் யூடியூப் வீடியோக்களை பகிர்வது எப்படி?
> ஸ்னாப்சாட்டில் யூடியூப் வீடியோக்களை பகிர விரும்பும் பயனர்கள் யூடியூப் தளத்தில் தங்களுக்கு பிடித்த வீடியோக்களை பார்க்க வேண்டும்.
> அந்த வீடியோவில் உள்ள ஷேர் ஆப்ஷன் மூலம் ஸ்னாப்சாட் ஐகானை பயனர்கள் க்ளிக் செய்ய வேண்டும். பின்னர் ஸ்னாப்சாட் கேமரா ஒப்பனாகும்.
> அங்கு பயனர்கள் தங்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள டூல்ஸ்களை கொண்டு ஸ்டிக்கர்களை உருவாக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.