ரம்ஜான் மாதத்தையொட்டி, அரசு ஊழியர்கள் ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கி மாநில அரசு உத்தரவு பிறப்பித்து உள்ளது.
தெலங்கானா
மாநிலத்தில், முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்ட்ரீய சமிதி கட்சியின் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த மாநிலத்தில், இஸ்லாமியர்களின் பண்டிகையான ரம்ஜானை ஒட்டி, மாநில அரசு ஊழியர்களுக்கு சிறப்பு சலுகைகளை வழங்கி அம்மாநில முதலமைச்சர் சந்திரசேகர் ராவ் உத்தரவிட்டு உள்ளார். அதன்படி, ரம்ஜான் மாதம் முழுவதும் அரசு ஊழியர்கள் பணியில் இருந்து ஒரு மணி நேரம் முன்னதாகவே வீட்டுக்குச் செல்ல அனுமதி வழங்கப்பட்டு உள்ளது.
இது தொடர்பாக தெலங்கானா மாநில தலைமை செயலாளர் சோமேஷ் குமார் வெளியிட்டுள்ள அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாவது:
மாநிலத்தில் பணிபுரியும் அனைத்து முஸ்லிம் அரசு சேவை / ஒப்பந்தம் / வெளியீட்டு வாரியங்களின் பொதுத் துறை ஊழியர்கள், அரசுப் பள்ளி ஆசிரியர்கள், தங்களது அலுவலகங்களில் இருந்து மாலை 4.00 மணிக்கு வீட்டுக்கு செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நடைமுறை, 03.04.2022 முதல் 02.05.2022 வரை அமலில் இருக்கும். மேற்கண்ட கால கட்டத்தில் தேவை ஏற்படும் போது தவிர மற்ற நேரங்களில் மாலை 4 மணிக்கு தங்களது கடமையை ஆற்ற முன்னதாகவே செல்லலாம்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதற்கு அம்மாநில அரசு ஊழியர்கள் வரவேற்பு தெரிவித்து உள்ளனர்.
அடுத்த செய்தி50 லட்சம் சொத்து, 10 பவுன் நகை.. அம்புட்டும் ராகுல் காந்திக்கே.. அசர வைத்த புஷ்பா!