ரஷ்யாவைச் சேர்ந்த பெண் ஸ்னைப்பர் ஒருவரை அவரது சக ரஷ்ய வீரர்கள் கைவிட்டுச் சென்ற விடயம் நினைவிருக்கலாம்…
படுகாயமடைந்த நிலையில் உக்ரைன் வீரர்களிடம் சிக்கிய Irina Starikova (41) என்ற அந்த பெண் ஸ்னைப்பர் இப்போது எப்படியிருக்கிறார் என்பது தெரியவில்லை.
இந்நிலையில், அவருக்குப் போட்டியாக உக்ரைன் தரப்பில் களமிறங்கியிருகிறார் ஒரு பெண் ஸ்னைப்பர்.
‘Charcoal’ என்ற புனைபெயரில் அழைக்கப்படும் அந்த பெண், 2017ஆம் ஆண்டு டான்பாஸ் பகுதியில் ரஷ்ய பிரிவினைவாதிகளுக்கெதிராக போராடியவர் ஆவார்.
இந்த ஆண்டு ஜனவரியில் அவர் இராணுவத்திலிருந்து விடைபெற்ற நிலையில், தற்போது மீண்டும் ரஷ்யப் படைகளை துவம்சம் செய்வதற்காக இராணுவத்துக்குத் திரும்பியிருக்கிறார்.
இந்த ரஷ்யர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் அரக்கர்கள், ஆகவே, ஒருவர் விடாமல் அவர்களைக் காலி செய்வோம் வாருங்கள் என அவர் தன் சக வீரர்களை உற்சாகப்படுத்தியுள்ளார்.
அவரை ஹீரோவாகக் கொண்டாடும் உக்ரைனியர்கள், அவரை மிகவும் பிரபலமான பெண் ஸ்னைப்பரான Lyudmila Pavlichenko என்ற பெண்ணுடன் ஒப்பிடுகிறார்கள்.
இதுவரை பெண் ஸ்னைப்பர்களாக இருந்தவர்களிலேயே மிகவும் வெற்றிகரமான ஸ்னைப்பர் Lyudmilaதான்.
இரண்டாம் உலகப்போரின்போது, நாஸிக்களில் 309 பேரைக் கொன்றதால், அவர் Lady Death என அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.