இந்திய பங்கு சந்தையின் தந்தை என்று செல்லமாக அழைக்கப்படும் ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, பங்கு சந்தைகளில் முதலீடு செய்பவர்களில் மிக பிரபலமானவர்.
இவர் பங்கு சந்தையில் நுழையும்போது ஆரம்பத்தில் வெறும் 5000 ரூபாய் மட்டுமே முதலீடு செய்துள்ளார்.
3 வாரத்தில் 40% லாபம்.. அடடா இதை மிஸ் பண்ணிட்டோமே.. புலம்பும் முதலீட்டாளர்கள்..!
ஆனால் இது மார்ச் 31, 2022 நிலவரப்படி, 37 பங்குகள் இவரின் போர்ட்போலியோவில் உள்ளது. இதன் மதிப்பு சுமார் 35,000 கோடி ரூபாயாகும்.
ராகேஷ் பற்றி
மும்பையில் உள்ள ஒரு கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த ஜுன்ஜுன்வாலா, அதன் பிறகு சிஏ-வும் படித்துள்ளார். இவரின் தந்தை வருமான வரித்துறை அதிகாரியாவார். ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் தந்தை அவரின் நண்பர்களுடன் பங்கு சந்தை குறித்த உரையாடலை கேட்ட ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவுக்கு, அதிலிருந்தே பங்கு சந்தை பற்றிய ஆர்வம் தொற்றிக் கொண்டுள்ளது. அதன் பிறகு தினசரி செய்தித்தாள்கள் மூலம் பங்கு சந்தையின் ஏற்ற இறக்கம் பற்றி முழுமையாக அறிந்து கொண்டுள்ளார்.
25 வயதில் பங்கு சந்தையில் முதலீடு
1960ம் ஆண்டு பிறந்தவரான இவர், 25 வயதிலேயே பங்கு சந்தையில் முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார். ஆரம்பத்தில் வெறும் 5000 ரூபாய் முதலீட்டினை செய்துள்ளார். முதன் முதலாவதாக டாடா குழுமத்தினை சேர்ந்த டாடா டீ-யில் முதலீடு செய்துள்ளார். மூன்று மாதத்திற்கு பிறகு இதன் மதிப்பு 3 மடங்காக அதிகரித்துள்ளது. இதனை தொடர்ந்து பங்கு சந்தைகளில் தொடர்ந்து முதலீடு செய்ய ஆரம்பித்துள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளிலேயே பல லட்சம் லாபம் பார்த்த நிலையில், தொடர்ந்து முழு நேர பங்கு சந்தை முதலீட்டாளராக மாறியுள்ளார்.
போர்ட்போலியோ மதிப்பு
மார்ச் 31, 2022 நிலவரப்படி, ராகேஷ் ஜுன் ஜுன்வாலாவின் போர்ட்போலியோவில் 37 பங்குகள் உள்ளது. இதன் மதிப்பு 34,964.1 கோடி ரூபாயாகும். எனினும் தற்போதைய முழு மதிப்பு என்ன என்பதற்கான டேட்டா எதுவும் வெளியாகவில்லை. ஆக 34,964.1 கோடி என்பதில் மாற்றம் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.
போர்ட்போலியோ பங்குகள்
இவரின் போர்ட்போலியோவில் TARC லிமிடெட், பிரகாஷ் பைஃப் லிமிடெட், தி மந்தனா ரீடெயில் வென்சர்ஸ் லிமிட்டெட், ION எக்ஞ்சேஞ்ச் லிமிட்டெட், விஐபி இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், பிரகாஷ் இண்டஸ்ட்ரீஸ் லிமிடெட், மல்டி கமாடிட்டி எக்ஞ்சேஞ்ச், லூபின் லிமிடெட், ஜிஎம்ஆர் இன்ஃப்ராட்ரக்சர் லிமிடெட், பர்ஸ்ட்சோர்ஸ் சொல்யூசன்ஸ், மெட்ரோ பிராண்ட்ஸ், ஸ்டார் ஹெல்த் & அலைட் இன்சூரன்ஸ், ஜூபிலியண்ட், நஷாரா டெக்னாலஜி, டைட்டன் நிறுவனம், டாடா மோட்டார்ஸ், டாடா கம்யூனிகேஷன்ஸ், செயில், ராலிஸ் இந்தியா, என்சிசி, ஓரியண்ட் சிமெண்ட், இந்தியன் ஹோட்டல்ஸ், எஸ்கார்ட்ஸ் லிமிடெட், கனரா வங்கி உள்ளிட்ட பல பங்குகள் அடங்கும்.
Rakesh Jhunjhunwala’s Rs 5,000 to Rs 35,000 crore journey
Rakesh Jhunjhunwala’s Rs 5,000 to Rs 35,000 crore journey/ராகேஷ் ஜுன்ஜுன்வாலாவின் ரூ.5000 டூ 35,000 கோடி வெற்றி பயணம்.. சாதித்தது எப்படி?