புதுடில்லி: 2019-20-ம் நிதி ஆண்டில், தேசிய கட்சியான பா.ஜ., பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூ. 720 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.
ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்) சார்பில், கட்சிகள் பெற்ற நன்கொடைகள் பற்றி ஆய்வு மேற்கொள்ளப்பட்டன. இதில் பாஜ., காங்கிரஸ்., திரிணாமுல் காங்., தேசியவாத காங்., இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய தேசிய கட்சிகள் இந்திய தேர்தல் ஆணையத்தில் வரவு செலவு கணக்கினை தாக்கல் செய்துள்ளன.
அதில் கூறப்பட்டுள்ளதாவது, 2019-20 நிதியாண்டில் 2,025 கார்பரேட் நிறுவனங்களிடமிருந்து பா.ஜ., ரூ. 720. 47 கோடியும், காங்கிரஸ் கட்சி 154 நிறுவனங்களிடமிருந்து ரூ. 133.04 கோடியும், சரத்பவாரின் தேசியவாத காங். கட்சி 36 நிறுவனங்களிடமிருந்து ரூ. 57.86 கோடியும் நன்கொடையாக பெற்றுள்ளது. இவ்வாறு அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
புதுடில்லி: 2019-20-ம் நிதி ஆண்டில், தேசிய கட்சியான பா.ஜ., பல்வேறு நிறுவனங்களிடமிருந்து ரூ. 720 கோடி நன்கொடையாக பெற்றுள்ளது தெரியவந்துள்ளது.ஜனநாயக சீர்திருத்தங்கள் சங்கம் (ஏ.டி.ஆர்) சார்பில்,
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.