ஆர்ப்பாட்டம் மற்றும் எதிர்ப்பு நடவடிக்கைகளின் போது வன்முறை மற்றும் குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படு நபர்கள், குழுக்கள் கைதுசெய்யப்படுவார்கள் என்று பொலிசார் தெரிவித்துள்ளனர்.
இதுதொடர்பாக பொலிஸ் ஊடகப் பிரிவு அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.
எவருக்கும் அமைதியான முறையில் போராட்டங்களை மேற்கொள்வதற்கு உரிமை உள்ளது. எனினும், குழப்பம் விளைவிக்கும் வகையில் செயற்படுவதற்கு எவருக்கும் அனுமதியில்லை. அதேபோல், பொதுச் சொத்துக்களுக்கு சேதம் விளைவிப்பவர்கள் கைது செய்யப்படுவார்கள். இது தொடர்பில் உரிய தரப்பினருக்கு ஆலோசனை வழங்கப்பட்டிருப்பதாக அந்த அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.