உலக நாடுகளில் எரிபொருள் விலை உயர்வு, உணவு பொருட்கள் தட்டுப்பாடு, விநியோகத்தில் தடை எனப் பல பிரச்சனைகள் காரணமாக உலக நாடுகளில் விலைவாசி அதிகரித்துள்ள நிலையில் நடுத்தர மக்களுக்குக் கடுமையான நெருக்கடியில் மாட்டிக்கொண்டு தவித்து வருகின்றனர்.
சேட்டையை துவங்கிய எலான் மஸ்க்.. டிவிட்டர் சிஇஓ பராக் அகர்வால் டிவீட்..!
ரஷ்யா மற்றும் உக்ரைன்
குறிப்பாக ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளை அதிகளவில் நம்பியிருக்கும் ஐரோப்பிய, பிரிட்டன் நாடுகள் விலைவாசி உயர்வால் கடுமையான பாதிப்பை எதிர்கொண்டு வருகின்றனர். பிரிட்டன் நாட்டின் நுகர்வோர் பணவீக்கம் 6.2 சதவீதமாக உயர்ந்துள்ளது.
பாங்க் ஆப் இங்கிலாந்து
ஆனால் பிரிட்டன் நாட்டின் மத்திய வங்கியான பாங்க் ஆப் இங்கிலாந்தில் பணவீக்கம் இலக்கை 2 சதவீதமாக நிர்ணயம் செய்துள்ளது. இந்தச் சூழ்நிலையில் பிரிட்டன் நாட்டில் ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்துள்ளார் அந்நிறுவனத்தின் தலைவர்.
45000 பவுண்ட்
பிரிட்டன் நாட்டில் இயங்கி வரும் எம்ரீஸ் டிம்பர் அண்ட் பில்டர்ஸ் மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ், தனது நிறுவனத்தில் பணியாற்றும் 60 ஊழியர்களுக்குச் சுமார் 45000 பவுண்ட் அளவிலான பணத்தைப் பிரித்துக் கொடுத்துள்ளார்.
அந்த மனசு தான் சார் கடவுள்
தனது நிறுவன ஊழியர்கள் விலைவாசியைச் சமாளிக்க வேண்டும் என்பதற்காகத் தலா 750 பவுண்ட் இந்திய ரூபாய் மதிப்பில் 74000 ரூபாயை கொடுத்துள்ளார். ஊழியர்கள் கஷ்டப்படுவது எனக்குத் தெரியும், அவர்களின் சுமையை நிறுவனத்தின் வெற்றி மூலம் ஈடு செய்யும் சிறு முயற்சியை எடுத்துள்ளதாக அறிவித்துள்ளார்.
விலைவாசி, வரி, கட்டணம் உயர்வு
பிரிட்டன் நாட்டில் கடந்த சில வாரத்தில் அரசு தனது வருவாயை அதிகரிக்க வேண்டும் என்பதைத் தாண்டி விலை உயர்வை சமாளிக்க வேண்டும் என்பதற்காக மின்சாரக் கட்டணம், கவுன்சில் டாக்ஸ், குடிநீர் கட்டணம், பிராண்ட்பேன்ட், மொபைல் சேவை கட்டணம், வீட்டு வாடகை ஆகியவை உயர்த்தியுள்ளது. இதன் மூலம் பிரிட்டன் நாட்டில் இருக்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் கடுமையாகப் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
60 ஊழியர்கள் மகிழ்ச்சி
இந்த நிலையை உணர்ந்த எம்ரீஸ் டிம்பர் அண்ட் பில்டர்ஸ் மெர்ச்சன்ட்ஸ் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் ஜேம்ஸ் ஹிப்கின்ஸ் தனது நிறுவனத்தில் பணியாற்றி வரும் 60 ஊழியர்களுக்கு 750 பவுண்ட் கொடுத்து உதவியுள்ளார். இந்தப் பணம் கட்டாயம் விலை உயர்வை சமாளிக்க உதவும் என இந்நிறுவன ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.
UK Boss pays 60 employees over ₹74,000 each Amid rising living costs
UK Boss pays 60 employees over ₹74,000 each Amid rising living costsவிலைவாசி ஏறிவிட்டது.. இந்தாங்க 74000 ரூபாய், ஊழியர்களுக்கு இன்ப அதிர்ச்சி கொடுத்த முதலாளி..!