புதுடில்லி-வெளியுறவுத் துறை செயலராக வினய் மோகன் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.
மத்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார். இந்நிலையில், நேபாள துாதராக பதவி வகிக்கும் வினய் மோகன் குவாட்ரா,60, வெளியுறவுத் துறை செயலராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவர் இம்மாதம் 30ல் பொறுப்பேற்கிறார்.கடந்த 1988ல் இந்திய வெளியுறவு பணியில் சேர்ந்த வினய் மோகன், 2017 – 2020 வரை பிரான்சு நாட்டின் இந்திய துாதராக பதவி வகித்தார்.வெளியுறவுப் பணியில் 32 ஆண்டுகள் அனுபவம் கொண்ட இவர், 2015 – 2017 வரை பிரதமர் அலுவலக இணைச் செயலராகவும் பணி புரிந்துள்ளார்.
புதுடில்லி-வெளியுறவுத் துறை செயலராக வினய் மோகன் குவாட்ரா நியமிக்கப்பட்டுள்ளார்.மத்திய வெளியுறவுத் துறை செயலராக இருந்த ஹர்ஷ் வர்தன் ஷ்ரிங்லா இம்மாத இறுதியில் பணி ஓய்வு பெறுகிறார்.
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.