பெய்ஜிங்: சீனாவின் மிகப்பெரிய ஷாங்காய் நகரில் ஒமிக்ரான் வைரஸ் வேகமாகப் பரவி வரும் நிலையில் அதை கட்டுப்படுத்த 2,000 ராணுவ மருத்துவ ஊழியர்கள் உட்பட 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களை அந்த நகருக்கு அனுப்பியுள்ளது சீன அரசு.
கடந்த 2019 இறுதியில் சீனாவில்கரோனா வைரஸ் உருவாகி உலகின் பல நாடுகளுக்கும் பரவியது. கரோனா பெருந்தொற்றால் உலகில்49.19 கோடிக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டனர். 61.76 லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
கரோனா வைரஸ் பரவலை தடுக்க, சீனா உள்ளூர் அளவிலான கடும் ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்தது. இது கடந்த 2 ஆண்டுகளாக சீனாவை வெளி உலகிலிருந்து கிட்டத்தட்ட துண்டித்துவிட்டது.
இந்நிலையில், சீனாவில் தற்போது பிஏ.2 என்ற ஒமிக்ரான் வகை கரோனா வைரஸ் வேகமாகப் பரவி வருகிறது. சீனாவில் நேற்று காலை வரையிலான 24 மணி நேரத்தில் 13 ஆயிரத்துக்கும் மேற்பட்டோருக்கு இத்தொற்று கண்டறியப்பட்டது. இவர்களில் சுமார் 12,000 பேர் அறிகுறியற்றவர்கள் ஆவர். சீனாவில் ஷாங்காய் நகரில் மட்டும் புதிதாக 9 ஆயிரம் பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இதையடுத்து ஜிலின் மாகாணத்தில் ஒரே நாளில் சுமார் 3,500 பேர்ஒமிக்ரான் தொற்றால் பாதிக்கப்பட் டுள்ளனர்.
இந்நிலையில், ஷாங்காங் நகருக்கு 2,000 ராணுவ மருத்துவஊழியர்கள் உட்பட, நாடு முழுவதிலும் இருந்து 10 ஆயிரத் துக்கும் மேற்பட்ட சுகாதார ஊழி யர்களை ஷாங்காய் நகருக்கு அனுப்பியுள்ளது சீன அரசு.
2.5 கோடி மக்கள்
2.5 கோடி மக்கள் தொகை கொண்ட ஷாங்காய் நகரில் இரண்டுகட்ட ஊரடங்கு நேற்று 2-வது வாரத்தில் அடியெடுத்து வைத்தது.இதையொட்டி வெகுஜன கரோனாபரிசோதனை மேற்கொள்ளப் பட்டது. ஷாங்காய் நகரில் பெரும்பாலான கடைகள் மற்றும் வர்த்தக நிறுவனங்கள் மூடப்பட்டுள்ளன. பல்வேறு தொழிற்சாலைகள் மற்றும் நிதி நிறுவனங்கள் தங்கள்ஊழியர்களை தனிமைப்படுத்து வதன் மூலம் தொடர்ந்து செயல்பட முடிகிறது. என்றாலும் சீனாவின் முதலீட்டு தலைநகராகவும் முக்கியகப்பல் கட்டுமானம் மற்றும் உற்பத்திமையமாகவும் விளங்கும் ஷாங்காயில் நீட்டிக்கப்படும் ஊரடங்கு கட்டுப்பாடுகளால் அதன் சாத்தியமான பொருளாதார தாக்கம் குறித்தகவலை அதிகரித்து வருகிறது.
கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்படும் அனைவரையும், அறிகுறிகள் இருந்தாலும் இல்லாவிட்டாலும் அவர்களை தனிமைப்படுத்துவது சீன அரசின் கரோனா வைரஸ் தடுப்பு உத்தியாக உள்ளது.எனவே ஷாங்காய் நகரில் ஆயிரக் கணக்கான படுக்கைகளுடன் கொண்ட தனிமைப்படுத்தும் மையங்களை சீன அரசு பரவலாக ஏற்படுத்தி வருகிறது.