தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரம் 04-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக “19 மசோதாக்களைக் கிடப்பில் போட்டிருக்கும் ஆளுநர்; திரும்பப் பெறக் கோரும் தமிழக அரசு… தீர்வுதான் என்ன?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்டுகளில் சில
சாஜித் சுட்டுரை
எதற்கெடுத்தாலும் ஆளுநரை சந்திக்கும் தமிழக #பாஜக தலைவர்கள் தமிழக மக்கள் நலன் சார்ந்த 19 மசோதாக்கள் கிடப்பில் இருக்க ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை? இதுதான் அரசியல்!அலங்கார அரசியல் பதவிகளில் அதிகாரம் செலுத்துவது இழுக்கு! மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற மசோதாக்கள் அனுமதிக்க வேண்டும்
Er.M.SenthilKumar
ஆளுநர் ஆளுநராக செயல்படவில்லை. பாஜகவின் கைப்பாவையாக செயல்படுகிறார். ஒன்றிய அரசின் தலையாட்டி பொம்மையாக காலம் தாழ்த்தும் பணியை சிறப்பாக செய்கிறார். காவிரிக்காக ஜெயலலிதா மெரினாவில் உண்ணாவிரதம் இருந்தது போல நீட் உள்ளிட்ட 19 மசோதாக்களை நிறைவேற்ற ஐயா ஸ்டாலின் உண்ணாவிரதம் இருக்க வேண்டும்
Inicko
தமிழ்நாடு அரசின் மக்கள் பிரதிநிதிகள் இயற்றிய மசோதாக்களை நியமனம் செய்யப்பட்ட ஆளுநர் தடைசெய்வது ஜனநாயக முரண்.
Nellai D Muthuselvam
கையெழுத்திட தயக்கம் காட்டும் அளவுக்கு மக்கள் நலனுக்கு எதிராக அந்த மசோதாக்களில் என்ன இருக்கிறது. பிற மாநிலங்களை பாதிக்காத , தவறான முன்னுதாரணங்களை உருவாக்காத மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்கலாம் ஆளுநர். மசோதாக்களில் தமிழக நலனுக்கும் , நாட்டு நலனுக்கும் எதிராக இருக்கும் அம்சங்களை ஆளுநர் வெளிப்படையாக பட்டியலிடலாம். மீண்டும் நிராகரிக்கப்பட காரணங்களை மக்கள் முன் பட்டியலிடலாம். அதைவிடுத்து காலம் தாழ்த்துவது எந்த தரப்புக்கும் பலன் அளிக்காது. நிராகரிக்கப்பட்ட மசோதா மீண்டும் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநரோ, குடியரசு தலைவர் கையெழுத்திட வேண்டும் என்ற சட்ட நெருக்கடியை வைத்து நிர்வாக தலைவர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் வழக்கம் சரியானதாக தெரியவில்லை.
Vasu Devan
மதுக்கடைகளை மூட நாங்களும்தான் மனு குடுக்குறோம். எல்லாம் கிடப்பில் தான் போகுது,Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM