பெங்களூரு: ஹிஜாப், முஸ்லிம் சிறு வணிகர்கள், ஹலால் இறைச்சி, என்று கர்நாடாகவில் தொடர்ந்து பதற்றத்தை ஏற்படுட்டு வரும் நிலையில். இந்துத்துவ அமைப்புகள் தற்போது கையில் எடுத்திருப்பது மசூதிகளில் வெளியே ஒலிக்கும் ஸ்பீக்கர்கள்.
இஸ்லாமியர்கள் தொழுகையின் போது அவர்கள் ஓதுவது ஒலிப்பெருக்கிகள் மூலம் ஒலிப்பரப்பு செய்யப்படும். இந்த நிலையில் பொதுவெளியில் இம்மாதிரியான ஸ்பீக்கர்கள் ஒலிக்கக் கூடாது என்று போர்க் கொடி தூக்கியுள்ளனர் பஜ்ரங் தள் மற்றும் ஸ்ரீ ராம் சேனா அமைப்பினர்.மேலும் இதற்குப் போட்டியாக கோவில்கள் வெளியே ஸ்ரீ ராம ஜெயம், அனுமன் மந்திரங்களை ஒலிப்பரப்ப தீவிர இந்து அமைப்புகள் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
இந்த நிலையில் பதற்றம் உருவாகும் இடங்களில் பாதுகாப்பை பலப்படுத்த கர்நாடக அரசு உத்தரவிட்டுள்ளது.
இதுகுறித்து, பாஜக மூத்த தலைவரும், மாநில அமைச்சருமான கே.எஸ்.ஈஸ்வரப்பா கூறும்போது, “ இஸ்லாமியர்கள் பாரம்பரியாக இவ்வாறு தங்களது பிரார்த்தனைகளை ஸ்பீக்கர்களில் ஒலிப்பரப்பு செய்கிறார்கள். ஆனால் இது மாணவர்கள், நோயாளிகள், குழந்தைகளுக்கு தொந்தரவு செய்கிறது” என்று தெரிவித்தார்.
பாஜக மூத்த நிர்வாகி ஈஸ்வரப்பா கூறுகையில், “இது போட்டி கிடையாது.மசூதிகளில் பிரர்த்தனைகள் ஸ்பீக்கரில் ஒலிப்பரப்பு செய்யப்படுவது குறித்து எனக்கு மறுப்பு இல்லை. ஆனால் கோயில்கள் , தேவாலயங்களிலும் இதற்கு அனுமதி அளித்தால் சமூகங்களிடம் பிரச்சினை உண்டாகும்” என்றார்.
கர்நாடகா கல்வித்துறை அமைச்சர் அச்த்வத் நாரயண் கூறும்போது, “ இது தொடர்பாக எந்த சட்டத்தையும் கர்நாடக அரசு கொண்டுவரவில்லை. நாங்கள் விதிமுறைகள்படி செயல்படுவோம். இதில் யாருக்கும் நாங்கள் ஆதரவாகவோ, எதிராகவோ நடந்து கொள்ள மாட்டோம்” என்றார்.
பஜ்ரங் தளம் உறுப்பினர் பரத் ஷெட்டி கூறும்போது, “ மசூதிகளில் உள்ள ஸ்பீக்கர்களுக்கு எதிரான பிரச்சாரத்தை பெங்களூருவில் உள்ள அனுமன் கோயிலிருந்து தொடங்க உள்ளோம். இது மாநிலம் முழுவதும் நடத்தப்படும்.” என்றார்.
ஸ்ரீ ராம் சேனாவின் பிரமோத் முத்தலிக் கூறும்போது, “ காலை 5 மணிக்கு ஒலிப்பரப்படும் ஸ்பீக்கர்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று மாசு கட்டுபாட்டு வாரியத்துக்கு புகார் அளித்திருந்தோம். ஆனால் எந்த நடவடிக்கையும் இல்லை. நாங்கள் அவர்களது பிரார்த்தனைகளை எதிர்க்கவில்லை. அவர்களது ஸ்பீக்கர்களைதான் எதிர்கிறோம். மசூதிகளில் ஸ்பீக்கர்களுக்கு தடை விதிக்கவில்லை என்றால் கோயில்களில் பஜனைகள் ஒலிக்கும். இரவு 10 மணி முதல் மாலை 6 மணிவரை ஸ்பீக்கர்களை பயன்படுத்த உச்ச நீதிமன்றமே தடை விதித்துள்ளது” என்றார்.