வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி: பொய் மற்றும் இந்தியாவிற்கு எதிராக செய்தி வெளியிட்ட 22 யூடியூப் சேனல்களை மத்திய தகவல் மற்றும் தொலைதொடர்புத்துறை அமைச்சகம் தடை செய்துள்ளது. அதில், 4 சேனல்கள் பாகிஸ்தானில் இருந்து இயங்கியவை.
இது தொடர்பாக மத்திய அரசு வெளியிட்ட அறிக்கை: பொய் மற்றும் நாட்டின் பாதுகாப்பிற்கு எதிராக செய்தி வெளியிட்டதற்காக 2021ம் ஆண்டு ஐடி விதிகள் அடிப்படையில், 22 யூடியூப் சேனல்கள், 3 டுவிட்டர் கணக்குகள், ஒரு பேஸ்புக் கணக்கு மற்றும் ஒரு செய்தி இணையதளம் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. தடை செய்யப்பட்ட யூடியூப் சேனல்களுக்கு 260 கோடி பார்வைகளை பெறுபவை.
இந்த சேனல்கள் பொய் செய்திகளை பரப்பவும், நாட்டின் பாதுகாப்பு, வெளியுறவு கொள்கை ஆகியவற்றை தொடர்பாக சமூக வலைதளங்களில் தவறான தகவல்களை ஒருங்கிணைக்க பயன்படுத்தப்பட்டன. டிவி சேனல்களின் சின்னங்களை பயன்படுத்தி, பார்வையாளர்களை, இந்த சேனல்கள் தவறாக வழி நடத்தின.
இந்திய ஆயுதப்படைகள், காஷ்மீர் குறித்து தவறான செய்திகளை பதிவிட்டதுடன், பாகிஸ்தானிலிருந்து செயல்படும் சேனல்கள் இந்தியாவிற்கு எதிரான கருத்துகளை பரப்பின. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Advertisement