தமிழ்நாட்டில் உள்ள மதுக்கடைகளின் குடிப்பகங்களை 6 மாதங்களுக்குள் மூட வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றத்தின் ஒற்றை நீதிபதி அளித்த தீர்ப்பு அளித்து இருந்தார்.
சென்னை உயர்நீதிமன்றத் தீர்ப்பின்படி குடிப்பக உரிமம் நிறைவடைந்துள்ள மற்றும் உரிமம் இல்லாத 3719 குடிப்பகங்கள் உடனடியாக மூடப்பட வேண்டும். மற்றவை 6 மாதங்களில் மூடப்பட வேண்டும் என்ற தனி நீதிபதியின் இந்த தீர்ப்பை எதிர்த்து 2 நீதிபதிகள் அமர்வில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது.
டாஸ்மார்க் அருகே பார்களை மூடவேண்டும் என்ற தனி நீதிபதியின் உத்தரவுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் தற்போது இடைக்கால தடை விதித்துள்ளது.
மேலும், டாஸ்மாக் பார்களை நடத்த ஏதுவாக விதிகளில் திருத்தம் கொண்டு வர தடை இல்லை என்றும், டாஸ்மாக் நிர்வாகத்தின் மேல்முறையீட்டு மனுவிற்கு பதிலளிக்க வேண்டும் என்று வழக்கு தொடர்ந்து மனுதாரருக்கு ஆணை பிறப்பித்தும், டாஸ்மாக் நிர்வாகம் தொடர்ந்த இந்த மேல்முறையீட்டு வழக்கை வருகிற ஏப்ரல் 26-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.