ருமேனியாவில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது ஒரு நபர் தனது காரில் வந்து வேகமாக மோதினார். இதில் கார் தீப்பிடித்து எறிந்தது. அந்த நபரும் தீயில் கருகி பலியாகி விட்டார்.
உக்ரைன் மீதான ரஷ்யாவின் போர் தொடர்கிறது. பேச்சுவார்த்தைகள் ஒரு பக்கம் நடந்தாலும் கூட மறுபக்கம் போரையும் தொடர்ந்து நடத்தி வருகிறது
ரஷ்யா
.
இந்த நிலையில் ஐரோப்பாவில் உள்ள ரஷ்ய தூதரகங்களை குறி வைத்து தொடர்ந்து போராட்டக்காரர்கள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். அந்த வகையில்
ருமேனியா
தலைநகர் புகாரெஸ்ட்டில் உள்ள ரஷ்ய தூதரகம் மீது ஒருவர் தாக்குதல் நடத்தியுள்ளார்.
புகாரெஸ்ட்டில் உள்ள ரஷ்ய தூதரகத்தை நோக்கி ஒருவர் காரில் வந்தார். வேகமாக காரை ஓட்டி வந்த அவர் அதி வேகத்தில் தூதரக கேட் மீது மோதினார். மோதிய வேகத்தில் கார் தீப்பிடித்துக் கொண்டது. காரில் இருந்த நபரும் பலத்த காயத்துடன் தீயில் சிக்கி கருகி உயிரிழந்தார்.
கையில காசு இல்லை.. திவாலாகும் நாடு.. வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் இலங்கை.. !
இந்த சம்பவம் குறித்து அறிந்ததும் தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது விபத்தாக இருக்க வாய்ப்பில்லை என்று சொல்கிறார்கள். ரஷ்யா மீதான எதிர்ப்பைக் காட்ட நடந்த தற்கொலைத் தாக்குதலாகவும் இது பார்க்கப்படுகிறது. காரில் வந்து மோதிய நபரின் அடையாளம் தெரியவில்லை. அதுகுறித்து விசாரணை நடந்து வருகிறது. அந்த மர்ம நபர் குறித்த விவரங்களை இதுவரை போலீஸார் வெளியிடவில்லை.
இதற்கிடையே, சர்வதேச விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படாத காரணத்தால் ரஷ்ய தூதரகத்தைச் சேர்ந்த 10 அதிகாரிகளை நாட்டை விட்டு வெளியேற்றுவதாக ருமேனியா அறிவித்துள்ளது. இந்த நிலையில்தான்
ரஷ்ய தூதரகம் மீது தாக்குதல்
நடந்துள்ளது.
உக்ரைன் போர்
காரணமாக அந்த நாட்டிலிருந்து 6.25 லட்சம் பேர் ருமேனியாவுக்கு இடம் பெயர்ந்து வந்துள்ளனர். பிப்ரவரி 24ம் தேதி உக்ரைன் மீது ரஷ்யா தனது போரைத் தொடங்கியது. இந்தப் போர் முடிவே இல்லாமல் நீண்டு வருகிறது. இத்தனை நாட்களாக போர் நடந்து வந்தாலும் கூட இன்னும் ரஷ்யாவாவால் எந்த பெரிய வெற்றியையும் பெற முடியவில்லை. குட்டி குட்டி நகரங்களை மட்டுமே இதுவரை அது கைப்பற்றியுள்ளது. பெரிய நகரங்கள் எதுவும் இன்னும் ரஷ்யப் படைகளிடம் வீழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திகையில காசு இல்லை.. திவாலாகும் நாடு.. வெளிநாட்டுத் தூதரகங்களை மூடும் இலங்கை.. !