வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
கொழும்பு: இலங்கையில் ராஜபக்சே அரசு அனைத்தையும் சீனாவுக்கு விற்று வருகிறது. நாட்டில் எதுவும் இல்லை, மற்ற நாடுகளிடம் இருந்து கடனாக எல்லாவற்றையும் வாங்கியுள்ளனர் என இலங்கை உணவு வியாபாரிகள் குற்றம் சாட்டுகின்றனர்.
இலங்கையில் முன்னெப்போதும் இல்லாத வகையில் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. பழங்கள் மற்றும் காய்கறிகளின் விலைகள் விண்ணைத் தொடுகின்றன. 3 மாதங்களுக்கு முன்னரே ஆப்பிள் கிலோ ரூ.500க்கு விற்கப்பட்டது. தற்போது கிலோ ரூ.1000 ஆக உள்ளது. பேரிக்காய் கிலோ ரூ.1500க்கு விற்கப்படுகிறது. மக்களிடமும் பணம் இல்லை என்கின்றனர். எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசா அதிபராட்சி முறையை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என போர் கொடி உயர்த்த தொடங்கியுள்ளார்.
இது பற்றி இந்திய ஊடகம் ஒன்றிற்கு இலங்கை வியாபாரிகள் அளித்த பேட்டி: தினமும் விலைவாசி அதிகரித்து வருகிறது. அரசிடம் பணம் எதுவும் இல்லை. இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றது. அதுவே மிகப் பெரிய பிரச்னை. சீனாவிடம் அனைத்தையும் விற்றதால் இலங்கையிடம் பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. எங்களுக்கும் வியாபாரம் எதுவும் இல்லை. கோத்தபய ராஜபக்சே நல்லவர் கிடையாது. அவர் பதவி விலக வேண்டும். இவ்வாறு கூறினர்.
Advertisement