2022ம் ஆண்டுக்கான உலகக் கோடீஸ்வரர்கள் பட்டியலை பிரபல ஆய்வு பத்திரிகையான போர்பஸ் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில், உலகளவில் 10-வது இடத்தையும், இந்திய அளவில் முதலிடத்தையும் ரிலையன்ஸ் நிறுவனர் முகேஷ் அம்பானி பிடித்துள்ளார்.
இதுகுறித்து வெளியாகி உள்ள தகவலின்படி, முகேஷ் அம்பானியின் சொத்து கடந்த நிதியாண்டு மேலும் 7 சதவீதம் அதிகரித்து இருப்பதாகவும், தற்போது, 9ஆயிரத்து 70 கோடி டாலருடன் முதலிடத்தை பிடித்து உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது. இவர் இந்திய அளவில் முதலிடத்தில் இருந்தாலும், உலக அளவில் 10வது இடத்தில் இருந்து வருகிறார் என்றும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இந்திய கோடீஸ்வரர்கள் பட்டியலில் 2வது இடத்தை கவுதம் அதானி பிடித்துள்ளார். இவரது சொத்து மதிப்பு 9 ஆயிரம் கோடி
பிரபல கணினி தயாரிப்பு நிறுவனமா எச்சிஎல் நிறுவனத்தின் இயக்குநர் ஷிவ் நாடார் 2,870 கோடி டாலர் சொத்துக்களுடன் 3-வது இடத்தில் உள்ளார்.
4வது இடத்தில், கொரோனா தடுப்பூசியான கோவிஷீல்ட் தடுப்பூசியைத் தயாரித்த சீரம் நிறுவனத்தின் இயக்குநர் ஆதார் பூனாவல்லா இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு 2430 கோடி
5-வது இடத்தில் டி-மார்ட் நிறுவனத்தின் இயக்குநர் ராதாகிருஷ்ணன் தாமணி இருக்கிறார். இவரது சொத்து மதிப்பு ரூ. 2ஆயிரம் கோடி
அர்சலர்மிட்டல் நிறுவனத்தின் தலைவர் லட்சுமி மிட்டல் 1790 கோடி டாலர் சொத்துக்களுடன் 6-வது இடத்திலும்,
ஓ.பி. ஜிண்டால் குழுமத்தின் தலைவர் சாவித்ரி ஜிண்டால் 1770 கோடி சொத்துக்களுடன் 7-வது இடத்தில் உள்ளார்.
ஆதித்யா பிர்லா குழுமத்தின் தலைவர் குமார் மங்கலம் பிர்லா 1650 கோடி டாலர் சொத்துக்களுடன் 8-வது இடத்திலும்,
சன் பார்மா நிறுவனத்தின் திலிப் சங்வி 1560 கோடி டாலர் சொத்துக்களுடன் 9-வது இடத்தில் உள்ளார்.
கோடக் மகிந்திரா நிறுவனத்தின் தலைவர் உதய் கோடக் 1430 கோடி டாலர்களுடன் 10-வது இடத்தில் உள்ளார்.
இந்தியாவில் கோடீஸ்வரர்கள் எண்ணிக்கை கடந்த 2021ம் ஆண்டில் 140ஆக இருந்த நிலையில் 166 ஆக அதிகரித்துள்ளது. இந்த உலகில் மொத்தம் 2,668 கோடீஸ்வர்கள் உள்ளனர். இதில் கடந்த ஆண்டை விட 87 பேர் கோடீஸ்வரர்கள் பட்டியலில் இருந்து குறைந்துள்ளதாக போர்ப்ஸ் தெரிவித்துள்ளது.
உலகளவில் கோடீஸ்வரர்களின் சொத்து மதிப்பும் கடந்த ஆண்டைவிட இந்த ஆண்டு 40,000 கோடி டாலர் குறைந்து, 12.70 லட்சம் கோடி டாலர்களாகச் சரிந்துள்ளது. இந்த ஆண்டு கோடீஸ்வரர்கள் பட்டியலுக்கு புதிதாக 236 பேர் வந்துள்ளனர்.
2022ம் ஆண்டின் உலகின் டாப் டென் பணக்காரர்கள் யார் யார்? ஹுருன் நிறுவனம், ஃபோர்ப்ஸ் மாறுப்பட்ட தகவல்…