இலங்கையின் நெருக்கடி நிலை குறித்து மூடிஸ் வெளியிட்டுள்ள அறிவிப்பு!



இலங்கையில் ஏற்பட்டுள்ள பொருளாதார நெருக்கடியானது கொள்கை நிச்சயமற்ற தன்மையை, வெளிப்புற பணப்புழக்கம் மற்றும் நிதி சிக்கல்களை அதிகரிக்கிறது என்று மூடிஸ் தெரிவித்துள்ளது.

ஏப்ரல் 3-4 திகதிகளில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மகிந்த ராஜபக்சவைத் தவிர, இலங்கையின் முழு அமைச்சரவையும் இராஜினாமா செய்திருந்தது.

மத்திய வங்கியின் ஆளுநரும் இராஜினாமா செய்திருந்தார்.

உயர் பணவீக்கம் காரணமாக அதிகரித்து வரும் பொதுமக்களின் அதிருப்தி மற்றும் சமூக பதட்டங்களின் பிரதிபலிப்பாகவே இந்த இராஜினாமா இடம்பெற்றிருந்தது.

இலங்கையில் அத்தியாவசியப் பொருட்களின் பற்றாக்குறை மற்றும் நீண்ட மின்வெட்டு நடைமுறையில் இருக்கும் நேரத்தில் அரசியல் மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மையை அதிகரித்து வருகிறது.

கடுமையான வெளிப்புற பணப்புழக்கம், நிதி நெருக்கடி மற்றும் மோசமடைந்து வரும் மைக்ரோ பொருளாதாரச் சூழலை அனுபவிக்கிறது.

ஜனாதிபதி பதவி விலக வேண்டும் என வலியுறுத்தி பொது மக்கள் அவரது வீட்டை முற்றுகையிட்டதை அடுத்து அரசாங்கம் அவசரகால நிலையை அறிவித்தது.

அத்துடன், ஏப்ரல் 2-3 திகதிகளில் இரண்டு நாள் முழு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.

இந்நிலையில், தீவிரமடையும் சமூக அமைதியின்மை மற்றும் அவ்வப்போது நடைமுறைப்படுத்தப்படும் ஊரடங்கு உத்தரவுகள் சுற்றுலாத் துறையை மேலும் சிரமப்படுத்தக்கூடும்.

மேலும் தொற்றுநோய்க்கு முன்னர் வெளிநாட்டு நாணய வரவுகளை உயர்த்துவதற்கான அரசாங்கத்தின் திட்டங்களில் முக்கியமான பகுதியாக இருந்த சுற்றுலா துறையை மீட்டெடுப்பதை தாமதப்படுத்துகிறது” என மூடிஸ் கூறியுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.