டிஜிட்டல் தகவல் தொழில் நுட்ப யுகத்தில் அனைத்து கேள்விகளுக்கும் விடைகள் எளிதாகப் பெற முடிகிறது. சமையல் முதல் உடற்பயிற்சி வரை, வீட்டில் அன்றாட வாழ்க்கையில் உயயோகப்படும் சின்ன சின்ன தொழில்நுட்ப சிக்கல்களை சரி செய்வது வரை அனைத்துக்குமான வழிகாட்டுதல்கள் தகவல்கள் இணையத்தில் எளிதாகக் கிடைக்கிறது. கூகுள் அனைத்து கேள்விகளுக்கும் பதிலளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
அதே போல, அரசு நிர்வாகங்களில் ஏதேனும் திட்டத்தை அணுகுவதில் சிரமம் ஏற்பட்டால், அதற்கான வழிகாட்டுதல்கள், பதில்கள் முழுவதுமாக இணையத்தில் கிடைப்பதில்லை. அதனால், தமிழகத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் மக்களுக்கு ஏற்படும் கேள்விகளை தீர்ப்பதற்கு இந்த டிஜிட்டல் யுகத்தில், தமிழ்நாட்டில் தன்னாட்சி அமைப்பால் இலவச தொலைபேசி சேவையான மக்கள் தகவல் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இது உள்ளாட்சித் தொடர்பான அனைத்துக் கேள்விகளுக்கும் பதிலளிக்கிறது.
மகாத்மா காந்தி தேசிய வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அட்டைக்கு பதிவு செய்வதற்கான செயல்முறையைக் தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா அல்லது உங்கள் ஊராட்சியில் அழகுபடுத்தும் பணிகளுக்கான பட்ஜெட் ஒதுக்கீடு குறித்த விவரங்களை தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? கால்நடை வளர்ப்பு குறித்த சமீபத்திய அரசு உத்தரவு பற்றி தெரிந்துகொள்ல விரும்புகிறீர்கள் அல்லது உள்ளாட்சி அமைப்பின் செயல்பாடுகள் பற்றி ஏதாவது தெரிந்துகொள்ள விரும்புகிறீர்களா? இதைப் பற்றி உங்களுக்கு எதுவும் தெரியவில்லை என்றால் கவலைப்படாதீர்கள்.
இத்தகைய தகவலுக்கான தேவை, எப்போதும் கிடைக்கும் படியாகவே உள்ளது. ஆனால், சிலர் அதை எப்படி தெரிந்துகொள்வது என்று தெரியாமல் இருக்கலாம். இந்த குறையைத்தான் தன்னாட்சி தனது இலவச தொலைபேசி சேவை மூல மக்கள் தகவல் மையம் மூலம் பூர்த்தி செய்ய முயற்சித்துள்ளது.
கிராம சபைகளுக்கு பிரச்சாரம் செய்வது முதல் ஊராட்சி அளவில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதிநிதிகளுக்கான திறன் மேம்பாடு வரை இளைஞர்கள் மற்றும் பெண்கள் சுய உதவி குழுக்களை மேம்படுத்தும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களுக்கு உதவுவது வரை உள்ளாட்சி நிர்வாகத்தில் பல ஆண்டுகால பணியுடன் கூடிய இந்த தொலைபேசி சேவை மையம் அடுத்த நகர்வாக பார்க்கபடுகிறது.
“இத்தகைய செயல்பாட்டில், உள்ளூர் அளவிலான திட்டங்கள் மற்றும் சிக்கல்கள் பற்றிய உள்ளீடுகள் மக்களுக்குத் தொடர்ந்து தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். பல்வேறு நிலைகளில் தகவல் தேவையானதாக உள்ளது. ஒரு ஊராட்சித் தலைவருக்கு அரசாணை பற்றிய தகவல் தேவைப்படும். அதேசமயம் மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டத்தின் தொழிலாளிக்கு அவர்களின் பணிப் பதிவுடன் ஆதார் அட்டையை இணைப்பதற்கு உதவி அல்லது வேலை அட்டையைப் பெறுவதற்கு உதவி தேவைப்படலாம். இது போன்ற உள்ளாட்சி அமைப்புகள் தொடர்பாக்ன திட்டங்கள் பற்றிய தகவல்கள்கள் யாருக்காவது தேவை என்றால், அவர்களின் கேள்விகளுக்கு உடனடியாக பதில் தேவை என்பதை நாங்கள் உணர்ந்தோம். அதனால்தான், இந்த தொலைபேசி சேவை மையம் அமைக்கப்பட்டது என்று தன்னாட்சி அமைப்பினர் கூறுகின்றனர்.
இந்த ஆண்டு ஜனவரி 26ம் தேதி தொடங்கப்பட்ட இந்த முயற்சி, கிராமப்புற உள்ளூர் நிர்வாகத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது; ஊராட்சி மற்றும் நிர்வாகம், அரசு திட்டங்கள், மகாத்மா காந்தி தேசிய வேலை உறுதித் திட்டம் மற்றும் நிதி ஆகியவை தொடர்பான கேள்விகளுக்கு பதில்களைப் பெறலாம். இந்த தொலைபேசி சேவை மையத்தை ஓய்வு பெற்ற ஐஏஎஸ் அதிகாரி சாந்தா ஷீலா நாயர் திறந்து வைத்தார்.
இந்த சேவைக்கு எதிர்பார்த்ததை விட நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது என்று கூறுகின்றனர். ஆரம்பத்தில் ஒரு நாளைக்கு 15 அழைப்புகள் வந்தன. அதற்கு பிறகு, அழைப்புகள் குறைந்துவிட்டன. போஸ்டர் ஒட்டி விளம்பரம் செய்யும்போது அழைப்புகள் அதிகமாக இருக்கும். எனவே நாங்கள் முயற்சி செய்கிறோம். ப்ரோமோஷனில் கவனம் செலுத்த வேண்டும். இது அதிகமான மக்களைச் சென்றடைகிறது” என்று தெரிவிக்கின்றனர்.
இந்த சேவையை நகர்ப்புறங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கான திட்டம் உள்ளது. ஆனால், அதற்கு சிறிது காலம் காத்திருக்க வேண்டும், சில நிதி மற்றும் அதிக தன்னார்வலர்களுக்காக காத்திருக்கிறோம் என்று கூறுகின்றனர்.
இந்த தொலைபேசி சேவை மையம், காலை 10 மனி முதல் 1 மணி வரை செயல்படுகிறது. அழைப்புகளை 9443662058 என்ற எண்ணுக்கு மேற்கொள்ளலாம். இதில், உள்ளாட்சி தொடர்பான அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்கள்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”