ஊரடங்கால் ஏற்பட்ட நெருக்கடி அரசுக்கு மட்டுமல்ல; மக்களுக்கும் தான்!- #LikeDislike

தினமும் மாலை 7 மணிக்கு டிஜிட்டல் விவாத மேடையின் தலைப்பு புதிய தலைமுறையின் ட்விட்டர் & ஃபேஸ்புக் பக்கங்களில் வெளியாகும். அது பற்றிய உங்கள் கருத்துகளை அங்கேயே பதிவிடலாம். புதிய கோணத்தில், சுவாரஸ்யமாகச் சொல்லப்படும் கருத்துகளில் தேர்வு செய்யப்படுபவை, எழுதியவரின் பெயரோடு புதிய தலைமுறை இணையப் பக்கத்தில் வெளியாகும் என அறிவித்திருந்தோம். அதன்படி, ஏப்ரம் 05-ஆம் தேதி தேதிக்கான தலைப்பாக “உயரும் சொத்துவரி முதல் சுங்கக் கட்டணம் வரை… நெருக்கடியில் சிக்கித் தவிக்கும் மக்கள்…  தீர்வு என்ன?” எனக் கேட்டிருந்தோம். வந்திருந்த கமெண்ட்டுகளில் சில
Er.M.SenthilKumar
மக்களால் அமையப்பெற்ற அரசால் மக்களுக்கு அன்றாட வாழ்வில் நெருக்கடி ஏற்பட்டுள்ளது. ஆதலால் மக்கள் வாக்கின் வலிமையை உணர்ந்து இனிவரும் தேர்தல்களில் சனநாயகத்தை காத்திட நேர்மையான மக்கள் நலன் சார்ந்த கட்சியை தேர்ந்தெடுக்க வேண்டும். இலவசங்களுக்கும் கவர்ச்சி அறிவிப்புகளுக்கும் ஏமாறக்கூடாது. நம் வாழ்வில் அனைத்தையும் தீர்மானிப்பது அரசியல்தான் என்பதை மக்கள் உணர வேண்டும். திரைப்பட, தொலைக்காட்சி நாடக மோகங்களில் இருந்து வெளிவர வேண்டும். ஒவ்வொரு நாளும் நம்மை சுற்றி அரசாங்கம் என்ன செய்கிறது என்பதை ஆராய்ந்து புரிந்துகொள்ள வேண்டும். தற்போதைய ஒரே தீர்வு அறப்போராட்டம் மட்டுமே.
Singamuthu
தீர்வு என்ன என்பதை மக்களிடம் கேட்டால் மக்கள் என்ன சொல்வார்கள். 5 ஆண்டுக்கு ஒருமுறை தான் மக்கள் முடிவு எடுக்கும் வாய்ப்பு வருகிறது. அதனையும் மக்கள் வறுமையை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்டு தாங்கள் நினைத்ததை சாதித்து அதன் பின்னர் 5 ஆண்டுகள் ஆட்சியில் மக்கள் நிலை?
Advice Avvaiyar
மக்களுக்கு இதை செய்றோம்; அதைச் செய்றோம் எனச்சொல்லி ஓட்டு வாங்கி விட்டு,ஒருவர் மீது ஒருவர் குற்றம் கூறிக் கொண்டே விலை உயர்வு, வரிச்சுமைகள் என போட்டுக் கொண்டு போவது நியாயமே இல்லை. வலைக்குள் சிக்கிய மீன்களைப்போல சிக்கிக் கொண்ட மக்கள் எல்லாவற்றையும் கட்ட அதிக பணம் சம்பாதித்தே ஆகனும்.
image
Rameshkumar Ckp
இந்தியா ஏற்கெனவே இலங்கை போலதான் இருக்கிறது. இதுல இலங்கைய பாத்து கடும் பொருளாதார நெருக்கடியில்னு பேச்சு வேற… இந்தியாவே அப்படித்தான் இருக்கிறது. மத்திய அரசும் மாநில அரசும் மக்களை வாட்டி வதைக்கின்றன.. பெட்ரோல் டீசல் , சமையல் கியாஸ் விலை ஏற்கனவே வாட்டி வதைக்கும் நிலையில் மாநில அரசும் மக்களை துயரத்தில் ஆழ்த்துகிறது. தேர்தல் நேரத்தில் மாற்றம் இல்லையெனில் அதோ கதிதான்..
த.பா. தங்க ராஜ்
இலங்கையைப் போல வெகுவிரைவில் இந்தியாவும் திவாலாகும்,Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.