உக்ரைனில் நிலைமை மோசம் அடைந்து உயிர்ச்சேதம் மற்றும் அடக்குமுறைகள் அதிகரித்துள்ளது குறித்து ஐநாபாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா கவலை தெரிவித்துள்ளது.
போரை உடனடியாக நிறுத்த வேண்டும் என்றும் இந்தியாவுக்கான பிரதிநிதி டி.எஸ்.திருமூர்த்தி மீண்டும் வலியுறுத்தியுள்ளார். உக்ரைனில் ஏற்பட்டிருக்கும் போர்ச் சூழலால் உணவுப் பொருட்கள், மருந்துகள் உள்ளிட்ட மனிதாபிமான ரீதியான உதவிகளை இந்தியா வழங்கி வருவதாக அவர் தெரிவித்தார்.
வரும் நாட்களில் உக்ரைனுக்கு மருந்துகள் விநியோகம் அதிகப்படுத்தப்படும் என்றும் இந்தியா உறுதியளித்துள்ளது.புச்சா பகுதியில் அப்பாவி மக்கள் கொன்று குவிக்கப்பட்டதாக வரும் தகவல்கள் மிகுந்த கவலையளிப்பதாகவும் இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக சுதந்திரமான விசாரணை நடைபெற வேண்டும் என்றும் பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் இந்தியா வலியுறுத்தியுள்ளது