ஒய்யாரமான இம்ரான் கான் மனைவியோட தோழி.. காலுக்குக் கீழே அது என்ன?.. பரபரக்கும் பாக்.!

பாகிஸ்தான்
பிரதமர் இம்ரான் கானின் மனைவி புஷ்ரா பீபியின் நெருங்கிய தோழியை வைத்து ஒரு பரபரப்பு பாகிஸ்தானை கலக்கி வருகிறது. 90,000 டாலர் மதிப்புடைய கைப்பையுடன் அவர் தனி விமானத்தில் துபாய்க்குப் போனதுதான் இப்போது பரபரப்பாகியுள்ளது.

பாகிஸ்தானில் கடந்த சில நாட்களாக அரசியல் களேபரமாக இருக்கிறது. தனக்கு எதிராக வெளிநாடு ஒன்று சதி செய்வதாக
இம்ரான் கான்
புகார் கூறியிருந்தார். அவருக்கு எதிரான நம்பிக்கை இல்லாத் தீர்மானம் தோல்வி அடைந்த போதிலும் கூட அவரைச் சுற்றி நிலவி வரும் சர்ச்சைகளும், சலசலப்புகளும் இன்னும் குறைந்தபாடில்லை.

இந்த நிலையில் தற்போது இம்ரானின் மனைவின் புஷ்ராவின் தோழியை முன்வைத்து ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. அவரது பெயர் பாரா கான். இவர் பாகிஸ்தானிலிருந்து துபாய்க்கு தனி விமானத்தில் போயுள்ளார். அவர் விமானத்தில் போனது பெரிதாக பேசப்படவில்லை. மாறாக அவர் கொண்டு போன கைப்பைதான் பரபரப்பைக் கிளப்பியுள்ளது.

எங்களைப் பார்க்க வந்ததால்.. இம்ரான் கானை தண்டிக்கிறது அமெரிக்கா.. ரஷ்யா

ஞாயிற்றுக்கிழமை அவர் துபாய்க்குக் கிளம்பிச் சென்றார். அவர் மீது ஏகப்பட்ட ஊழல் புகார்கள் ஏற்கனவே உள்ளன. அதிகாரிகள் நியமனம், இட மாறுதல் உள்ளிட்டவற்றுக்கு அவர் நிறைய லஞ்சம் வாங்கிக் கொண்டு உதவி செய்ததாக குற்றச்சாட்டு உள்ளது. பாகிஸ்தான் வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு மிகப் பெரிய ஊழல் வாதி இவர் என்றும் அவர் மீது குற்றச்சாட்டுக்கள் உள்ளன.

இந்த நிலையில் அவர் தனி விமானத்தில் பயணித்தது சர்ச்சையாகியுள்ளது. ஒய்யாரமாக அவர் அமர்ந்திருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது. அதில் அவரது காலுக்குக் கீழே ஒரு கைப்பை உள்ளது. அதன் விலை 90,000 டாலராகும் என்று சொல்கிறார்கள்.

அதி வேகமாக காரில் வந்து கேட்டில் மோதி.. ரஷ்ய தூதரகம் மீது தற்கொலை தாக்குதல்!

இதுகுறித்து பாகிஸ்தான் முஸ்லீம் லீக் நவாஸ் ஷெரீப் கட்சியின் தலைவரான ரொமினா குர்ஷித் ஆலம் போட்டுள்ள டிவீட்டில், பாரா கான், தப்பி ஓடி விட்டார். அவரது கைப்பையின் விலை 90,000 டாலராகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஏற்கனவே பாரா கானின் கணவரும் பாகிஸ்தானை விட்டு வெளியேறி விட்டார். தற்போது பாரா கானும் வெளியேறியுள்ளதால் இம்ரான் கான் மீதான அழுத்தம் அதிகரித்துள்ளது.

பாரா கான் ஊழல் குறித்து நவாஸ் ஷெரீப்பின் மகளும், அவரது கட்சியின் துணைத் தலைவருமான மரியம் நவாஸ் கூறுகையில், இம்ரான் கான் மற்றும் அவரது மனைவி சார்பாகத்தான் ஊழலில் ஈடுபட்டிருந்தார் பாரா கான். தனது பதவியை இழந்து விட்டால், தான் செய்த திருட்டுத்தனங்கள் எல்லாம் வெளியாகி விடும் என்ற அச்சத்தில் இருக்கிறார் இம்ரான் கான் என்றார் அவர்.

இதற்கிடையே, இம்ரான் கானுக்கு வேண்டப்பட்ட பலரும் கூட நாட்டை விட்டு வெளியேறத் திட்டமிட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. ஞாயிற்றுக்கிழமைதான் இம்ரான் கான் நாடாளுமன்றத்தைக் கலைத்து உத்தரவிட்டார். விரைவில் தேர்தல் நடத்தவும் அவர் அதிபருக்குப் பரிந்துரைத்துள்ளார். அடுத்த பிரதமர் நியமிக்கப்படும் வரை இடைக்கால பிரதமராக தொடருமாறு இம்ரான் கானுக்கு அதிபர் ஆரிப் அலி உத்தரவிட்டுள்ளார்.

அடுத்த செய்திஅதி வேகமாக காரில் வந்து கேட்டில் மோதி.. ரஷ்ய தூதரகம் மீது தற்கொலை தாக்குதல்!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.