ஓமாம்புலியூர் துயர்தீர்த்தநாதர் கோயில்

பிரணவ வியாக்ரபுரீஸ்வரர் கோயில் கடலூர் மாவட்டத்தில் அமைந்துள்ளது.

3ஆம் குலோத்துங்கன் காலத்திய கல்வெட்டில் இத்தலம் ‘வடகரை விருதராசபயங்கர வளநாட்டு மேற்கா நாட்டுப் பிரமதேயம் ஓமாம்புலியூராகிய உலகளந்த சோழசதுர்வேதி மங்கலம்’ என்றும், இறைவன் பெயர் ‘வடதளி உடையார்’ என்றும் குறிக்கப்பட்டுள்ளது.

ஸ்ரீ காஞ்சி காமகோடி பீடாதிபதி ஜகத்குரு ஸ்ரீ ஜயேந்திர சரஸ்வதி சுவாமிகள் அவர்களின் பொன் விழாத் திட்டத்தில் இத்திருக்கோயிலின் சுவாமி, அம்பாள், ஆறுமகர் விமானங்கள் திருப்பணிகள் செய்து புதுப்பிக்கப்பட்டுள்ளன. மாசிமகத்தில் பெருவிழா, நவராத்திரி, சிவராத்திரி, கார்த்திகைச் சோமவாரங்கள் முதலிய விழாக்கள் நடைபெறுகின்றன.

கோயில் அமைப்பு:

கிழக்கு நோக்கிய கோயில். ராஜகோபுரம் மூன்று நிலைகளையடையது. எதிரில் கௌரி தீர்த்தம் உள்ளது. கரையில் தனியே ஒரு சிவாலயம். பிராகாரத்தில் ஆறமுகப் பெருமான் சந்நிதி உள்ளது. வலமுடித்து உட்சென்றால் நேரே சுவாமி சந்நிதி. சதுரபீடத்தில் உயர்ந்த பாணத்துடன் இறைவன் காட்சிதருகின்றார் – சுயம்புமூர்த்தி. சுவாமி சந்நிதியில் ஒருபுறம் சலந்தரனை அழிக்கத் திருமாலுக்குச் சக்கரம் வழங்கிய சிற்பமும், மறுபுறம் ஐந்து புலியூர்களில் வழிபடப்பட்ட ஐந்து சிவலிங்கங்களும் செதுக்கப்பட்டுள்ளன. இத்தலத்தில் உள்ள தட்சிணாமூர்த்தி மிகச்சிறப்புடையது. குருமூர்த்தத்தலம். உபதேசம் செய்த தட்சிணாமூர்த்தி (கோயிலுக்குள்ளேயே மூலமூர்த்தியாக) உயர்ந்த பீடத்தில் சிலாரூபத்தில் காட்சிதருகின்றார். கோஷ்டத்தில் நடராசரின் சிலாரூபம் (வியாக்ர பாதருக்குக் காட்சிதந்த வடிவம்) உள்ளது. ஏனையகோஷ்ட மூர்த்தங்களாக விநாயகர் முதலியோர் உளர். அம்பாள் சந்நிதி அழகாகவுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.