டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 78 வயது மூதாட்டி, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, உயில் எழுதி வைத்துள்ளார். உத்தரகண்டில், முதல்வர் புஷ்கர்சிங் தாமி தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு, டேராடூனில் முதியோர் இல்லத்தில் வசிக்கும் மூதாட்டி புஷ்பா முன்ஜியால், 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை, காங்., முன்னாள் தலைவரும், எம்.பி.,யுமான ராகுல் பெயரில் உயில் எழுதி உள்ளார்.இதற்கான ஆவணங்களை, அவர் கட்சி நிர்வாகிகளிடம் ஒப்படைத்தார்.
இதுகுறித்து, டேராடூன் காங்., தலைவர் லால்சந்த் சர்மா கூறியதாவது:ராகுலின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, தன் சொத்துக்களை அவர் பெயரில் உயில் எழுதி வைத்து உள்ளதாக, புஷ்பா கூறினார். மேலும், சோனியா, ராகுல் இருவரும் தேச சேவையில் தங்களை அர்ப்பணித்து உள்ளதாகவும், அதனால் இந்த முடிவை எடுத்ததாகவும் புஷ்பா தெரிவித்தார்.இவ்வாறு அவர் கூறினார்.
டேராடூன்:உத்தரகண்ட் மாநிலத்தைச் சேர்ந்த, 78 வயது மூதாட்டி, 50 லட்சம் ரூபாய் மதிப்புள்ள தன் சொத்துக்களை, காங்., முன்னாள் தலைவர் ராகுலுக்கு, உயில் எழுதி வைத்துள்ளார்.உத்தரகண்டில், முதல்வர்
ஊடக தர்மம் உங்கள் கரங்களில்…!
சமரசத்துக்கு இடமளிக்காமல்… அதிகாரத்துக்கு அடிபணியாமல்… நேர்மையான முறையில் துணிச்சலான செய்திகளை மக்களிடம் கொண்டு சேர்க்கும் இணையத்தள செய்தி ஊடகங்களுக்கு, விளம்பர வருவாயே உயிர்நாடி. அதுவே, நீங்கள் விரும்பி வா(நே)சிக்கும் தினமலர், இணையதளத்துக்கும்…
ஆகவே அன்பிற்கினிய வாசகர்களே,‘ஆட்பிளாக்கர்’ உபயோகிப்பதை தவிர்த்து, துணிச்சலான ஊடகத்தின் நேர்மைக்கு தோள் கொடுங்கள். உங்கள் பார்வைக்கு இடையூறாக வரக்கூடிய விளம்பரத்தை மட்டும், ’ஸ்கிரீன் ஷாட்’ எடுத்து எங்களுக்கு அனுப்புங்கள். உங்களின் சிரமத்துக்கு தீர்வு காணுகிறோம்.
இங்கு வெளியாகும் விளம்பரங்கள், வாசகர்களுக்கு பயனளிக்கும் என்பதாலேயே சேர்க்கப்படுகின்றன. Ad blocker போடுவதன் மூலம், பயனுள்ள பல தகவல்களை நீங்கள் தவறவிடவும் வாய்ப்புண்டு. Ad blocker ஐ தவிருங்கள்.