விவோ தனது புதிய பிரீமியம் ஃபிளாக்ஷிப்
விவோ எக்ஸ் நோட்
ஸ்மார்ட்போனை அறிமுகப்படுத்த உள்ளது. நிறுவனம் ஏப்ரல் 11 ஆம் தேதி இந்த ஸ்மார்ட்போனை சீனாவில் அறிமுகம் செய்கிறது. புதிய விவோ போன் அறிமுகம் செய்யப்பட இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், அதன் புகைப்படங்கள் சீனாவின் பிரபல சமூக வலைத்தளமான Weibo இல் பகிரப்பட்டுள்ளன.
கூடுதலாக, ஸ்மார்ட்போனின் வடிவமைப்போடு சில விவரக்குறிப்புகளும் தெரியவந்துள்ளன. விவோ எக்ஸ் நோட்டின் கசிந்த புகைப்படத்தை வைத்து பார்க்கும் போது, மொபைலின் முன்புறத்தில் வளைந்த விளிம்பு கொண்ட டிஸ்ப்ளே வழங்கப்படும் எனத் தெரியவந்துள்ளது.
இது சென்டர் பஞ்ச்-ஹோலுடன் வரும் அமோலெட் டிஸ்ப்ளே ஆகும். இந்த பிளாக்ஷிப் ஸ்மார்ட்போனில் நிறுவனம் மிக மெல்லிய பெசல்களை கொடுத்திருக்கிறது. போனின் வலதுபுற பக்கவாட்டில் வால்யூம் ராக்கர், பவர் பட்டன் கொடுக்கப்பட்டுள்ளது.
நம்ம ஊரு டாடாவின் புதிய ‘Neu’ சூப்பர் ஆப் – அனைத்து சேவைகளும் விரல் நுனியில்!
விவோ எக்ஸ் நோட் அம்சங்கள்
Vivo X நோட் போனின் பின்பக்க பேனல் லெதர் ஃபினிஷைக் கொண்டுள்ளது. கூடுதலாக, பின்புற பேனலில் ஒரு பெரிய கேமரா அலகு காணப்படுகிறது. நான்கு கேமராக்கள் அமைப்புடன் ZEISS பிராண்டிங் கொண்ட LED ஃபிளாஷ் யூனிட் உள்ளது. பின் பேனலின் கீழ் பக்கத்தில் Vivo லோகோ அச்சிடப்பட்டுள்ளது.
இந்த ஸ்மார்ட்போனானது நீலம், கருப்பு, சாம்பல் ஆகிய நிறங்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனின் முக்கிய தகவல்கள் அனைத்தும் தற்போது இணையத்தில் கசிந்துள்ளது.
அதில் கிடைத்த தகவல்களின்படி, இந்த ஸ்மார்ட்போனில் QHD+ தெளிவுத்திறனுடன் கூடிய 7″ இன்ச் AMOLED டிஸ்ப்ளே இடம்பெறும். டிஸ்ப்ளே 120 ஹெர்ட்ஸ் ரெப்ரெஷ் ரேட், அல்ட்ரா-சோனிக் இன்-ஸ்கிரீன் கைரேகை சென்சார் உடன் வரும் எனத் தெரியவந்துள்ளது.
விவோ எக்ஸ் நோட் கேமரா
வெளியாக காத்திருக்கும் புதிய விவோ பிரீமியம் 5ஜி போனில், 12 ஜிபி வரை ரேம் மெமரி மற்றும் 256 ஜிபி வரை ஸ்டோரேஜ் மெமரி வழங்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த போனில் சக்திவாய்ந்த
Snapdragon 8 Gen 1
சிப்செட் நிறுவப்பட்டிருக்கும்.
புகைப்படம் எடுப்பதற்கு நான்கு பின்புற கேமராக்கள் காணப்படுகிறது. இது 50MP மெகாபிக்சல் முதன்மை சென்சார், 12MP மெகாபிக்சல் கேமரா, 8MP மெகாபிக்சல் கேமராவுடன் 48 மெகாபிக்சல் கேமராவைக் கொண்டிருக்கும் என்று கூறப்படுகிறது. செல்பி, வீடியோ அழைப்புகளுக்காக 32MP மெகாபிக்சல் கேமரா வழங்கப்பட்டுள்ளது.
எலான் மஸ்க் மருந்து வேலை செய்கிறது! அம்சமான ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் ட்விட்டர்!
மேலும், 80 வாட் பாஸ்ட் சார்ஜிங் ஆதரவுடன் கூடிய சக்திவாய்ந்த 5,000mAh பேட்டரி இதில் கொடுக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த ஸ்மார்ட்போனின் விலை விவரங்கள் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முதலில் இந்த ஸ்மார்ட்போன் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
அடுத்த செய்திஎலான் மஸ்க் மருந்து வேலை செய்கிறது! அம்சமான ஆப்ஷன்களை அறிமுகம் செய்யும் ட்விட்டர்!