ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் அமெரிக்காவின் புதிய பொருளாதார தடைகள் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் மக்கள் படுகொலை செய்யப்பட்டு சாலைகளில் வீசப்பட்டு கிடந்த காணொளிகள் இணையத்தில் வெளியாகி சர்வதேச அளவில் கொந்தளிப்பை ஏற்படுத்தியது.
இதையடுத்து, ரஷ்யா மீது கடுமையான புதிய பொருளாதார தடைகளை விதிக்க மேற்கத்திய நாடுகள் தாயராகியுள்ளன.
இந்நிலையில், மேற்கத்திய நாடுகளின் கடுமையான புதிய தடைகள் ரஷ்ய அதிபர் புடினின் மகள்களை குறிவைத்து விதிக்கப்படும் என அமெரிக்க செய்தித்தாளான வால் ஸ்ட்ரீட் ஜேர்னல் தகவல் தெரிவித்துள்ளது.
உடனே வெளியேறுங்கள்..! உக்ரேனியர்களுக்கு துணை பிரதமர் எச்சரிக்கை
இத்தகவலை மற்றொரு அமெரிக்க ஊடக வட்டாரங்களும் உறுதிப்படுத்தியுள்ளன.
புடின்-அவரது முன்னாள் மனைவி Lyudmila Putina ஜோடிக்கு Mariya Putina, Yekaterina Putina என இரண்டு மகள்கள் உள்ளனர்.
Lyudmila Putina, 2013ல் அவர்களது 30 வருட திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்ததாக அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.