இலங்கையில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் வெளிநாட்டுத் தூதரகங்களை மூட முடிவு செய்துள்ளது
இலங்கை
அரசு. முதல் கட்டமாக சில நாடுகளின் தூதரகங்களை மூட அது முடிவு செய்துள்ளது.
இலங்கை பொருளாதார நெருக்கடி
நாளுக்கு நாள் அங்கு நிலைமையை மோசமாக்கிக் கொண்டுள்ளது. மக்கள் போராட்டங்கள் அதிகரித்த வண்ணம் உள்ளன. இந்த நிலையில் செலவீனங்களைக் குறைக்கும் நடவடிக்கையில் இலங்கை அரசு இறங்கியுள்ளது. அதில் முதல் முக்கிய முடிவாக வெளிநாட்டு தூதரகங்களை மூட அது தீர்மானித்துள்ளது.
நார்வே தலைநகர் ஆஸ்லோ, ஈராக்கின் தலைநகர் பாக்தாத் ஆகிய நகரங்களில் உள்ள தூதரகங்கள், ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள துணைத் தூதரகத்தை அது தற்காலிகமாக மூடவுள்ளது. ஏப்ரல் 30ம் தேதியுடன் இவை மூடப்படும்.
“ஒரு ஆணியும் புடுங்க வேணாம் கிளம்பு”.. கோத்தபயாவுக்கு எதிராக களம் குதித்த தமிழர்கள்!
இதுதொடர்பாக இலங்கை அரசு விடுத்துள்ள அறிக்கை: ஆஸ்லோ, பாக்தாத் தூதரகங்கள் மற்றும் சிட்னி துணைத் தூதரகத்தை தற்காலிகமாக மூட தீர்மானிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் 30ம் தேதி முதல் இது அமலுக்கு வரும். இதுதொடர்பான முடிவு நீண்ட ஆலோசனைக்குப் பிறகு எடுக்கப்பட்டுள்ளது. தற்போது இலங்கையில் நிலவி வரும் பொருளாதார சூழ்நிலை மற்றும் வெளிநாட்டு நாணய மதிப்பு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, அதன் அடிப்படையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ஆஸ்லோ தூதரகத்தை மூடுவதால் அதன் பணிகளை ஸ்டாக்ஹோமில் உள்ள தூதர் பார்த்துக் கொள்வார். அதேபோல ஈராக்கில் உள்ள தூதரகப் பணிகளை அபுதாபியில் உள்ள தூதர் பார்த்துக் கொள்வார். கான்பெராவில் உள்ள துணைத் தூதர், சிட்னி துணைத் தூதரின் பணிகளைப் பார்த்துக் கொள்வார். ஆஸ்லோ, பாக்தாத் மற்றும் சிட்னியில் உள்ள இலங்கை குடிமக்களின் தூதரக ரீதியிலான பிரச்சினைகளைப் பார்த்துக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை இலங்கை வெளியுறவு அமைச்சகம் மேற்கொள்ளும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அடுத்த செய்திதென் கொரியா, வட கொரியா மாறி மாறி வார்னிங்… உலகப் போருக்கு கொண்டு போய் விடாம இருந்தா சரி!