திருவனந்தபுரம்: கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பத்தனாபுரம், பிரவத்தூர், பட்டாழி ஆகிய பகுதிகளில் நேற்றிரவு லேசான நில அதிர்வு ஏற்பட்டது. சுமார் 11.36 மணியளவில் இந்த நில அதிர்வு உணரப்பட்டது. 20 விநாடிகள் முதல் 40 வினாடிகள் வரை நில அதிர்வு இருந்ததாக அந்த பகுதியினர் கூறுகின்றனர். வீடுகளில் இருந்த பாத்திரங்கள் உருண்டு கீழே விழுந்ததாகவும் கூறப்படுகிறது. இதனால் சிலர் வீடுகளை விட்டு வெளியே ஓடினர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.