உக்ரைன் பெண் மேயர் ஒருவர் ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு படுகொலை செய்யப்படும் முன்னர் தமது கிராம மக்களுக்கு அளித்த செய்தி தற்போது வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
உக்ரைன் நகர மேயரான Olga Sukhenko ரஷ்ய துருப்புகளால் கடத்தப்பட்டு, அவரது சடலமானது கணவர் மற்றும் மகன் உடல்களுடன் பள்ளம் ஒன்றில் கண்டெடுக்கப்பட்டது.
Olga Sukhenko வசித்துவந்த குடியிருப்பில் இருந்தே குடும்பத்துடன் ரஷ்ய துருப்புகளால் வலுக்கட்டாயமாக கடத்தப்பட்டு, படுகொலை செய்து வனப்பகுதியில் ஒரு பள்ளத்தில் சடலத்தை வீசிச் சென்றுள்ளனர்.
ரஷ்ய துருப்புகளுக்கு ஒத்துழைக்க மறுத்த காரணத்தாலையே, ஓல்கா குடும்பத்துடன் கடத்தப்பட்டு, படுகொலை செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஓல்கா கடத்தப்படுவதற்கு முன்னர் தமது பகுதி மக்களுக்கு பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்ட கருத்து கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில், அன்பான குடியிருப்பாளர்களே, நமது பகுதியை எவருடைய குப்பைகளோ ஆக்கிரமித்துள்ளதாக அறிகிறேன்.
எச்சரிக்கையாக இருங்கள், உங்கள் குடியிருப்பை விட்டு வெளியே செல்லாதீர்கள், அமைதி காப்போம் என ஓல்கா குறிப்பிட்டுள்ளார்.
உக்ரைன் மீது ரஷ்யா படையெடுப்பை முன்னெடுத்த மூன்றாவது நாள், பிப்ரவரி 27ம் திகதி ஓல்கா தமது பேஸ்புக் பக்கத்தில் குறித்த கருத்தை பதிவு செய்துள்ளார்.
மேலும், தமது பகுதி மக்களை பத்திரமாக நகரை விட்டு வெளியேற்றும் நடவடிக்கையில் ஈடுபட்டு வந்த ஓல்காவால், தமது குடும்பத்துடன் உரிய நேரத்தில் வெளியேற முடியாமல் போயுள்ளது.
இந்த நிலையில், ஓல்கா குடும்பத்துடன் கடத்தப்பட, அவரது ஆதரவாளர்கள் சமூக ஊடகங்களில் உதவி கேட்டு கோரிக்கை விடுத்தனர்.
ஆனால் ஓல்கா குடும்பம் சடலமாக, பள்ளம் ஒன்றில் புதைக்கப்பட்ட நிலையில் அவரது ஆதரவாளர்களால் மீட்கப்பட்டது.
ஓல்கா கொல்லப்பட்டதை உக்ரைன் அரசாங்கமும் உறுதி செய்துள்ளது.