பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்கள் அல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே என தமிழத் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவை பதவி விலகுமாறு கோரி எதிர்க்கட்சியினர் நாடாளுமன்றில் இன்று போராட்டம் ஒன்றினை முன்னெடுத்தனர்.
அத்துடன், ஜனாதிபதி கோட்டாய ராஜபக்ச நாடாளுமன்றத்தில் திடீரென வருகைத் தந்ததாகவும் எனினும் சபைக்குள் வரவில்லை எனவும் அறிவிக்கப்பட்டது.
இந்தநிலையில் ஆர்ப்பாட்டத்தின்போதே சாணக்கியன் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாடாளுமன்றத்தினை கலைக்கும் நோக்குடனேயே ஆளும் தரப்பினர் நாடாளுமன்றத்தில் செயற்பட்டு வருகின்றனர் எனவும் அவர் கூறினார்.
எனினும் பதவி விலக வேண்டியது 225 நாடாளுமன்ற உறுப்பினர்களும் அல்ல, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்சவே எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.