இலங்கையில் தற்போது கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளது. இங்கு உணவுப்பொருட்கள், எரிபொருட்களுக்கு கடும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதனால் அவற்றின் விலை அதிகமாக உயர்ந்துள்ளது. மேலும் அங்கு அரசியல் நெருக்கடியும் ஏற்பட்டுள்ளது.
3 மாதங்களுக்கு முன்பு கிலோ ரூ.500-க்கு விற்கப்பட்ட ஆப்பிள் தற்போது ரூ.1000 ஆக உயர்ந்துள்ளது. ரூ.700க்கு விற்கப்பட்ட பேரிக்காய் ரூ.1500 ஆக விலை உயர்ந்துள்ளது. இதனை விலை கொடுத்து வாங்குவதற்கு அங்கு பொதுமக்களிடம் பணம் இல்லை.
ராஜபக்சே சீனாவிடம் எல்லாவற்றையும் விற்றுவிட்டார் என்று அவர் மீது வியாபாரிகள் கோபத்தில் உள்ளனர். இது தொடர்பாக வியாபாரிகள் கூறியதாவது:-
இலங்கை அரசாங்கம் அனைத்தையும் சீனாவுக்கு விற்றுவிட்டது. இதுவே மிகப்பெரிய பிரச்சினை. இதனால் இலங்கை அரசிடம் தற்போது பணம் இல்லை. மற்ற நாடுகளிடம் இருந்து கடன் வாங்குகிறது. இதன் காரணமாக விலைவாசி நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மக்களிடம் பணம் இல்லாததால் எந்த வியாபாரமும் இல்லை.