சீனாவின் சிச்சுவான் மாகாணம் யிபின் நகரில் உள்ள ஜிவ்வென் கவுண்டியில் இன்று காலை 7.50 மணியளவில் திடீரென நிலநடுக்கம் ஏற்பட்டது.
இதன் ரிக்டர் அளவு 5.1 ஆக பதிவாகி இருப்பதாக சீனா பூகம்ப மையம் தெரிவித்துள்ளது. இந்த நிலநடுக்கம் 28.22 டிகிரி வடக்கு அட்சரேகை மற்றும் 105.03 டிகிரி கிழக்கு தீர்க்கரேகையில் சுமார் 10 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டதாக மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தின் மையப்பகுதியைச் சுற்றி 5 கிலோமீட்டருக்குள் பல கிராமங்கள் உள்ளன. இருப்பினும், நிலநடுக்கத்தால் அப்பகுதியில் உயிரிழப்புகள் குறித்து இதுவரை புகார் எதுவும் வரவில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இதையும் படியுங்கள்..
கர்நாடகத்தில் எஸ்.சி., எஸ்.டி. மக்களின் வீடுகளுக்கு இலவச மின்சாரம்: பசவராஜ் பொம்மை அறிவிப்பு