சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. கவனிக்க வேண்டிய ஹெச்டிஎஃப்சி வங்கி..!

இந்திய பங்கு சந்தைகள் நடப்பு வாரத்தின் மூன்றாவது வர்த்தக நாளான இன்று, முதலீட்டாளர்களுக்கு ஏமாற்றத்தினை தரும் விதமாக சற்று சரிவிலேயே காணப்படுகின்றது.

இந்த சரிவானது இப்படியே தொடருமா? அல்லது மீண்டும் ஏற்றம் காணுமா? கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்னென்ன? சர்வதேச சந்தைகளின் நிலவரம் என்ன?

இன்று கவனத்தில் கொள்ள வேண்டிய பங்குகள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.

சென்செக்ஸ் 435 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 18000-கீழ் முடிவு.. என்ன காரணம்!

 சர்வதேச சந்தைகள்

சர்வதேச சந்தைகள்

கடந்த அமர்வில் அமெரிக்க சந்தைகள் சற்று சரிவில் முடிவடைந்துள்ளன. இது அமெரிக்க ஃபெடரல் வங்கியின் கவர்னர் லேல் பிரைனார்ட்டின், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கியின் சாத்தியமான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கூறியதையடுத்து சரிவினைக் கண்டது. இதற்கிடையில் இன்று காலை தொடக்கத்தில் ஆசிய சந்தைகள் பலவும் சரிவிலேயே தொடங்கியுள்ளன. இதற்கிடையில் இந்தியா சந்தையும் சரிவிளேயே தொடங்கியுள்ளது.

 அன்னிய முதலீடுகள்

அன்னிய முதலீடுகள்

கடந்த ஏப்ரல் 5 நிலவரப்படி, அன்னிய முதலீட்டாளர்கள் 374.89 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர். இதே உள்நாட்டு முதலீட்டாளர்கள் 105.42 கோடி ரூபாய் மதிப்பிலான பங்குகளை வாங்கியுள்ளனர் என என்எஸ்இ தரவுகள் சுட்டிக் காட்டுகின்றன. கடந்த சில தினங்களாகவே தொடர்ந்து இந்திய சந்தையில் அன்னிய முதலீடுகள் அதிகரித்து வருகின்றன. இது சந்தைக்கு சாதகமான விஷயமாக பார்க்கப்படுகிறது.

 தொடக்கம் எப்படி?
 

தொடக்கம் எப்படி?

இன்று காலம் ப்ரீ ஓபனிங்கிலேயே சென்செக்ஸ் 66.18 புள்ளிகள் குறைந்து, 60,110.32 புள்ளிகளாகவும், நிஃப்டி 5.90 புள்ளிகள் குறைந்து, 17,910.70 புள்ளிகளாகவும் காணப்பட்டது.

இதனையடுத்து தொடக்கத்தில் சென்செக்ஸ் 461.44 புள்ளிகள் குறைந்து, 59,715.06 புள்ளிகளாகவும், நிஃப்டி 128.60 புள்ளிகள் குறைந்து, 17,828.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 996 பங்குகள் ஏற்றத்திலும், 868 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.

 

 கவனிக்க வேண்டிய பங்குகள்

கவனிக்க வேண்டிய பங்குகள்

இன்று கவனிக்க வேண்டிய பங்குகள் பட்டியலில் டாடா ஸ்டீல், டாடா பவர் நிறுவனம், டிவிஎஸ் மோட்டார்ஸ் நிறுவனம், மாரிகோ, குஃபிக் பயோசயின்ஸ், பந்தன் வங்கி, அதானி கீரின் எனர்ஜிம் அதானி எண்டர்பிரைசஸ், டாடா கன்சல்டன்ஸி சர்வீசஸ், திரிவேணி இன்ஜினியரிங் & இண்டஸ்ட்ரீஸ் உள்ளிட்ட பங்குகள் கவனிக்க வேண்டிய் பங்குகளில் ஒன்றாக உள்ளது.

 இன்டெக்ஸ் நிலவரம் & நிஃப்டி குறியீடு

இன்டெக்ஸ் நிலவரம் & நிஃப்டி குறியீடு

சென்செக்ஸ், நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே காணப்படுகின்றன. குறிப்பாக நிஃப்டி 50, பிஎஸ்இ சென்செக்ஸ், பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, நிஃப்டி ஆட்டோ, பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் சரிவில் காணப்படுகின்றன. மற்றவை பெரிய மாற்றமில்லாமல் காணப்படுகின்றன.

 நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீடு

நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, யுபிஎல், டாடா ஸ்டீல், என்.டி.பி.சி, டாடா மோட்டார்ஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, டெக் மகேந்திரா, ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, பஜாஜ் ஆட்டோ உள்ளிட்ட குறியீடுகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீடு

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டாடா ஸ்டீல், லார்சன், பஜாஜ் பின்செர்வ், பஜாஜ் பைனான்ஸ், அல்ட்ராடெக் சிமெண்ட் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, கோடக் மகேந்திரா, டெக் மகேந்திரா, எம் & எம் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.

 தற்போதைய நிலவரம் என்ன?

தற்போதைய நிலவரம் என்ன?

பல்வேறு காரணிகளுக்கு மத்தியில் சற்று சரிவில் தொடங்கிய சந்தையானது, தற்போது 9.33 மணி நிலவரப்படி, சென்செக்ஸ் 329.74 புள்ளிகள் குறைந்து, 59.846.76 புள்ளிகளாகவும், நிஃப்டி 84.5 புள்ளிகள் குறைந்து, 17,872.90 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகின்றது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

opening bell: sensex falls above 300 points, niFty trade below 17,900; focus in HDFC bank

opening bell: sensex falls above 300 points, niFty trade below 17,900; focus in HDFC bank /சென்செக்ஸ் 300 புள்ளிகளுக்கு மேல் சரிவு.. கவனிக்க வேண்டிய ஹெச்டிஎஃப்சி வங்கி..!

Story first published: Wednesday, April 6, 2022, 10:09 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.