மும்பை: இந்திய பங்கு சந்தையானது தொடர்ச்சியாக இரண்டாவது நாளாக இன்றும் சரிவில் முடிவடைந்துள்ளது.
இன்று காலை தொடக்கத்திலேயே சரிவில் தொடங்கிய சந்தையானது, முடிவிலும் சந்தைகள் சரிவில் தான் முடிவடைந்துள்ளன.
இது முந்தைய சில தினங்களாகவே தொடர்ந்து உச்சம் தொட்டு வந்த நிலையில், அதனை புராபிட் செய்ய முற்பட்டிருக்கலாம். இது சந்தையின் சரிவுக்கு முக்கிய காரணமாக இருக்கலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
வேலை செய்ய எது சிறந்த நிறுவனம்.. பட்டியல் போட்ட லிங்க்ட்இன்.. பட்டியலில் யாரெல்லாம்?
தொடக்கம் எப்படி?
இன்று காலை ப்ரீ ஓபனிங்கிலேயே சந்தையானது சற்று சரிவில் தான் தொடங்கியது. இதனையடுத்து தொடக்கத்திலும் சென்செக்ஸ் 461.44 புள்ளிகள் குறைந்து, 59,715.06 புள்ளிகளாகவும், நிஃப்டி 128.60 புள்ளிகள் குறைந்து, 17,828.80 புள்ளிகளாகவும் காணப்பட்டது. இதற்கிடையில் 996 பங்குகள் ஏற்றத்திலும், 868 பங்குகள் சரிவிலும், 122 பங்குகள் மாற்றமில்லாமலும் காணப்பட்டது.
முடிவில் எப்படி?
இதனையடுத்து சென்செக்ஸ் முடிவில் 566.09 புள்ளிகள் அல்லது 0.94% குறைந்து, 59,610.41 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 149.70 புள்ளிகள் அல்லது 0.83% புள்ளிகள் குறைந்து, 17,807.70 புள்ளிகளாகவும் முடிவுற்றுள்ளது. இதற்கிடையில் 2094 பங்குகள் ஏற்றத்திலும், 1229 பங்குகள் சரிவிலும், 92 பங்குகள் மாற்றமில்லாமலும் முடிவடைந்துள்ளது.
இதே டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 44 பைசா குறைந்து, 75.76 ரூபாயாக சரிந்து முடிவடைந்துள்ளது. இது கடந்த அமர்வில் 75.32 ரூபாயாக முடிவுற்று இருந்தது.
இன்டெக்ஸ் நிலவரம்
சென்செக்ஸ்,நிஃப்டி குறியீட்டில் உள்ள பெரும்பாலான குறியீடுகள் சரிவிலேயே முடிவடைந்துள்ளன. குறிப்பாக பேங்க் நிஃப்டி, நிஃப்டி ஐடி, பிஎஸ்இ டெக் உள்ளிட்ட குறியீடுகள் 1% மேலாக சரிவிலும், பிஎஸ்இ ஹெல்த்கேர், நிஃப்டி ஆட்டோ,பிஎஸ்இ கன்சியூமர் டியூரபிள், பிஎஸ்இ எஃப்.எம்.சி.ஜி, பிஎஸ்இ ஹெல்த்கேர் உள்ளிட்ட குறியீடுகள் 1% கீழாகவும் சரிவில் காணப்படுகின்றன. மற்ற குறியீடுகள் ஏற்றத்தில் காணப்படுகின்றன.
நிஃப்டி குறியீடு
இதற்கிடையில் நிஃப்டி குறியீட்டில் உள்ள கோல் இந்தியா, ஐஓசி, என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி,ஹெச்.டி.எஃப்.சி லைஃப், ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
சென்செக்ஸ் குறியீடு
சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள என்.டி.பி.சி, டாடா ஸ்டீல், பவர் கிரிட் கார்ப், பார்தி ஏர்டெல், நெஸ்டில் உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும், இதுவே ஹெச்.டி.எஃப்.சி வங்கி, ஹெச்.டி.எஃப்.சி, ஹெச்.சி.எல் டெக், டெக் மகேந்திரா, இன்ஃபோசிஸ் உள்ளிட்ட பங்குகள் டாப் லூசர்களாகவும் உள்ளன.
closing bell: sensex falls 566 points, nifty ends nearly 17,800
closing bell: sensex falls 566 points, nifty ends nearly 17,800/சென்செக்ஸ் 566 புள்ளிகள் சரிவு.. நிஃப்டி 17,800 அருகில் முடிவு.. முதலீட்டாளர்கள் பெரும் கவலை!