சென்னை மாநகராட்சி பட்ஜெட் வரும் 9ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் நகர்புற உள்ளாட்சி தேர்தல் அண்மையில் நடைபெற்று முடிந்தது. 21 மாநகராட்சிகளிலும் ஆளும் கட்சியான திமுகவே வெற்றி பெற்று மேயர் பதவியை பிடித்தது.
இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்கான பட்ஜெட் வரும் 9-ஆம் தேதி தாக்கல் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேயர் ஆர். பிரியா பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். அன்றைய தினமே பட்ஜெட் மீதான விவாதமும் நடைபெற உள்ளது. இதனால் பட்ஜெட் தாக்கலின் போது அனைத்து கவுன்சிலர்களும் தவறாமல் கூட்டத்தில் கலந்து கொள்ள வேண்டும் என மேயர் உத்தரவிட்டுள்ளார்.
பெருநகர சென்னை மாநகராட்சியில் 6 ஆண்டுக்கு பின், மாநகராட்சி பட்ஜெட் மாமன்ற கூட்டத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. மேயர் பிரியா பதவியேற்ற பிறகு முதல் பட்ஜெட் என்பதால், மாநகராட்சி வளர்ச்சி, மக்களுக்கான புதிய அறிவிப்புகள் இருக்கும் என்ற எதிர்பார்ப்பு அதிகமாக காணப்படுகிறது.