`சொல்லவே முடியாத வேதனையை எழுதுகிறேன்'- பாப் பாடகியின் சுயசரிதை; ரூ.112 கோடிக்கு ஒப்பந்தம்?!

பாப் பாடகி பிரிட்னி ஸ்பியர்ஸ் 90-களில் ஆரம்பித்து தனது குரலால் லட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்தவர். இவரது ஆல்பங்கள் விற்பனைகளில் பல சாதனைகளை முறியடித்திருக்கின்றன. உயரம் செல்ல செல்ல இவரைச் சுற்றி இருந்தவர்களே ப்ரிட்னியின் மீது ஆதிக்கம் செய்ய தொடங்க அவரது அனுமதி இல்லாமலே சுய வாழ்விலும் இசை பணியிலும் தலையிட ஆரம்பித்தனர். இதனால் மனநிலை சீராக இல்லாத ப்ரிட்னிக்கு காப்பாளர் தேவை என அவர் தந்தை 2008-ல் நீதிமன்றத்தில் முறையிடவும் அவர் காப்பாளர் நிலைப்பாட்டுக்குள் வருகிறார். 13 வருடங்களுக்குப் பிறகு 2021 நவம்பரில் தான் பிரிட்னி நீதிமன்ற காப்பில் இருந்து விடுவிக்கப்படுகிறார். இப்போது தான் கடந்து வந்த வலி மிகுந்த தன் வாழ்வின் சொல்ல முடியாத வேதனையை சுய சரிதையாக எழுதவிருப்பதாக அறிவித்திருக்கிறார்.

பிரிட்னி ஸ்பியர்ஸ்

நீதிமன்ற காப்பு (Conservatorship) என்பது மனதளவில் சுயமாக முடிவு எடுக்க முடியாத நிலையில் இருப்பவர்களின் சொந்த வாழ்வு மற்றும் அவர்களின் சொத்துக்களை மேற்பார்வையிடும் முறை. பிரிட்னி காப்பிலிருந்து விடுவிக்கப்பட்ட அன்று அவரது ரசிகர்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு தங்களின் ஆதரவை வெளிப்படுத்தினார்கள். தற்போது தன்னுடைய வாழ்க்கையைப் பற்றி பிரிட்னி சுயசரிதை எழுதவிருப்பது உறுதியாகி உள்ளது. சைமன் அன்ட் ஷஸ்டர் (Simon & Schuster) பதிப்பகம் சுயசரிதை புத்தகத்தை கொண்டு வருவதற்காக அமெரிக்க மதிப்பில் 15 மில்லியன் டாலருக்கு ஒப்பந்தம் செய்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருடைய வாழ்க்கை, உறவுகள், இசை பயணம் என அறியாத பக்கங்களை இந்த நூல் தெரிவிக்கும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.