ஜனாதிபதி எந்த வகையிலும் தனது பதவியை இராஜினாமா செய்ய மாட்டார்

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ எந்த வகையிலும் ஜனாதிபதி பதவியை இராஜினாமா செய்ய மாட்டார் என ஆளும் கட்சி பிரதம அமைப்பாளரும், அமைச்சருமான ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் இன்றைய தினம் (06) எதிர்க்கட்சி பிரதம அமைப்பாளர் லக்ஸ்மன் கிரியெல்ல கேட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ இவ்வாறு பதிலளித்தார்.
ஜனாதிபதிக்கு 69 இலட்சம் மக்கள் வாக்களித்துள்ளனர். அவர் பதவி விலக மாட்டார் நாம் அவருடன் ஒன்றிணைந்துள்ளோம் என்றும் அமைச்சர் மேலும் தெரிவித்தார். 

 
 

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.