ஜெலன்ஸ்கியை கொல்லும் திட்டம் இல்லை: டிமிட்ரி பெஸ்கோவ் அறிவிப்பு!


உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிகாரிகள் கொல்ல நினைப்பதாக வெளியான அறிக்கைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் மறுப்பு தெரிவித்துள்ளார்.

உக்ரைன் ரஷ்யா போரானது மாதக்கணக்கில் தொடர்ந்து வரும் நிலையில், ரஷ்யா உலக நாடுகள் மத்தியில் பல்வேறு பொருளாதாரத் தடைகளை எதிர்கொண்டு வருகிறது, மேலும் இந்த பொருளாதாரத்தடைகளால் ரஷ்ய மக்களும் பெருமளவு சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

இந்தநிலையில், ரஷ்யாவின் இந்த நெருக்கடிக்கு நேரடி காரணமான உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய சிறப்பு படைகள் கொலை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தொடர்ந்து பல்வேறு நாடுகளை சார்ந்த உளவுத்துறைகள் உக்ரைனை எச்சரித்து வருகின்றன.

இதையடுத்து உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை ரஷ்ய அதிகாரிகள் கொல்ல நினைப்பதாக வெளியான அறிக்கைகளை ரஷ்ய ஜனாதிபதியின் பத்திரிகை செயலாளர் டிமிட்ரி பெஸ்கோவ் முற்றிலுமாக மறுத்துள்ளார், இவ்வாறு வெளியாகி வரும் அறிக்கைகள் உண்மையில்லை எனவும் தெரிவித்துள்ளார்.

மேலும்
பேச்சுவார்த்தையில் ரஷ்யாவின் கோரிக்கைகளை ஜனாதிபதி ஜெலன்ஸ்கி ஏற்றுக்கொள்ள வேண்டும் என்பதில் ரஷ்யா ஆர்வமாக இருப்பதாகவும், இது உக்ரைனில் ராணுவ நடவடிக்கைகளை முடிவுக்கு கொண்டுவரும் எனவும் தெரிவித்துள்ளார்.

ஜனாதிபதி ஜெலன்ஸ்கியை
கொலை முயற்சிகளை டிமிட்ரி பெஸ்கோவ் முற்றிலுமாக மறுத்துள்ள நிலையில், ஜனாதிபதியின் மீது நடத்தப்பட்ட  இருந்த 3 கொலை முயற்சிகளை உக்ரைன் ராணுவம் முடியடுத்து இருப்பதாக உக்ரைன் பாதுகாப்பு துறை அமைச்சர் ஒலெக்ஸி ரெஸ்னிகோவ் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது. 

ஒற்றுமையான தமிழ் சிங்கள மக்களின் போராட்டம் சொல்வது என்ன? 



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.