தங்கம் விலை 4வது நாளாக கொடுத்த சர்பிரைஸ்.. எவ்வளவு குறைந்திருக்கு தெரியுமா?

தங்கம்(gold) விலையானது சர்வதேச சந்தையினை பொறுத்தவரையில் இன்றும் சற்று சரிவில் தான் காணப்படுகின்றது. இதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் 4வது நாளாக சரிவில் தான் காணப்படுகிறது.

சர்வதேச சந்தையில் தற்போதைய நிலவரம் என்ன? இந்திய சந்தையில் என்ன நிலவரம்? ஆபரணத் தங்கத்தின் விலை நிலவரம் என்ன? இந்த சரிவானது இப்படியே தொடருமா? கவனிக்க வேண்டிய முக்கிய காரணிகள் என்ன? டெக்னிக்கலாக எப்படி உள்ளது? நிபுணர்களின் கணிப்பு என்ன? மீடியம் டெர்மில் வாங்காலாமா? வேண்டாமா?

இது மீண்டும் முதலீட்டாளர்களுக்கும் வர்த்தகர்களுக்கும் கிடைத்த நல்ல வாய்ப்பா? அடுத்து என்ன செய்யலாம்? வாருங்கள் பார்க்கலாம்.

எலான் மஸ்க் வாக்குறுதி.. டிவிட்டர் நிர்வாகக் குழு நம்மதி பெருமூச்சுவிட்டனர்..!

4வது நாளாக சரிவில் தங்கம் விலை

4வது நாளாக சரிவில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்றே தடுமாற்றத்தில் காணப்படும் நிலையில், அதன் எதிரொலியாக இந்திய சந்தையிலும் தங்கம் விலையானது 4வது நாளாக சற்றே சரிவில் தான் காணப்படுகின்றது. டெக்னிக்கலாகவும் தங்கம் விலையானது இன்னும் சற்று அழுத்தம் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. இதனை ஊக்குவிக்கும் விதமாக பத்திர சந்தை, டாலர் மதிப்பு என பலவும் சந்தைக்கு சாதகமான விஷயங்களாகவே உள்ளன.

ஆர்வத்தினை குறைத்துள்ளது

ஆர்வத்தினை குறைத்துள்ளது

அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் லேல் பிரைனார்ட்டின், பணவீக்கத்தினை கட்டுப்படுத்த மத்திய வங்கியின் சாத்தியமான நடவடிக்கையை எடுக்கும் என்றும் கூறியதையடுத்து, டாலர் மதிப்பு, பத்திர சந்தை என இரண்டும் ஏற்றம் கண்டன. இது தங்கம் விலை சரிய காரணமாக அமைந்தது. இது இன்னும் சரியலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. வலுவான டாலர் மதிப்பு காரணமாக வட்டியில்லா முதலீடான தங்கத்தில் முதலீட்டு ஆர்வத்தினை குறைத்துள்ளது. இது தங்கம் விலையில் அழுத்தம் காண காரணமாக அமைந்துள்ளது.

பத்திர சந்தை ஏற்றம்
 

பத்திர சந்தை ஏற்றம்

ஃபெடரல் ரிசர்வ் வங்கியின் கவர்னர் லேல் பிரைனார்ட்டின் கருத்துக்கு பிறகு, அமெரிக்காவின் பத்திர சந்தையும் நல்ல ஏற்றத்தில் காணப்படுகின்றது. இதுவும் தங்கம் விலையில் அழுத்தத்தினை ஏற்படுத்தியுள்ளது. இது தங்கத்தில் முதலீடுகளை குறைக்க வழிவகுத்துள்ளது. மேலும் தொடர்ந்து அதிகரித்து வரும் பத்திர சந்தை காரணமாக, ஃபெடரல் ரிசர்வ் வங்கியினை விரைவில் வட்டி விகிதத்தினை கட்டுப்படுத்த தூண்டலாம்.

கவனத்தில் கொள்ள வேண்டிய உக்ரைன் பிரச்சனை

கவனத்தில் கொள்ள வேண்டிய உக்ரைன் பிரச்சனை

தொடர்ந்து பல கட்டமாக உக்ரைன் – ரஷ்யா இடையேயான பேச்சு வார்த்தை என்பது நடந்து வந்தாலும், இன்று வரையில் சமாதானம் ஏற்பட்டதாக தெரியவில்லை. மாறாக இன்னும் இவ்விரு நாடுகளுக்கும் இடையேயான பதற்றம் என்பதோடு மட்டும் அல்லாமல், உக்ரைனுக்கு ஆதரவாக பல நாடுகளும் கண்டனம் தெரிவித்து வருகின்றது. உக்ரைனுக்கு ஆதரவளிக்கும் விதமாக அடுத்தடுத்த தடைகளை ரஷ்யா மீது தடைகளை விதித்து வருகின்றன. ஏற்கனவே பல தடைகளை விதித்துள்ள அமெரிக்கா, மீண்டும் புதிய சுற்று தடைகள் பற்றி ஆலோசித்து வருவதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இது மேற்கொண்டு ரஷ்யாவினை பொருளாதார ரீதியாக தனிமைப்படுத்த எடுக்கப்படும் திட்டமாகவும் பார்கக்ப்படுகின்றது. அதேபோல ஐரோப்பிய ஒன்றியமும் புதிய சுற்று தடைகள் பற்றி ஆலோசித்து வருவதாக கூறியுள்ளது.

பணவீக்கம்

பணவீக்கம்

ரஷ்யா மீது அண்டை நாடுகள் விதித்து வரும் தொடர் தடைகளால் சர்வதேச பொருளாதாரம் என்னவாகுமோ என்ற அச்சம் எழுந்துள்ளது. இது தொடர்ந்து சப்ளை சங்கிலியில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, பணவீக்கமானது மிக மோசமான ஒன்றாக மாறியுள்ளது. இது பணவீக்கத்திற்கு எதிரான சிறந்த ஹெட்ஜிங் ஆக பார்க்கப்படும் தங்கத்திற்கு ஆதரவாக அமைந்துள்ளது.

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

டெக்னிக்கல் என்ன சொல்கிறது?

தங்கத்தின் விலையானது வார கேண்டில், தினசரி கேண்டில் என செல்லிங் பிரஷரினை கொடுத்தாலும், மீடியம் டெர்மில் இன்னும் தெளிவான சூழல் இல்லை என்றே கூறலாம். இது அதிகரித்து வரும் டாலர் மதிப்பு, பத்திர சந்தை ஏற்றம் என பல காரணிகளுக்கும் தீர்மானிக்கலாம். எப்படியினும் தினசரி கேண்டிலில் கடந்த அமர்வின் குறைந்த விலையை உடைத்துக் காட்டியுள்ளது. பல இண்டிகேட்டர்களும் மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாக காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது இன்று இரண்டாவது நாளாக சற்று சரிவில் காணப்படுகின்றது. இது தற்போது அவுன்ஸுக்கு 6 டாலர்கள் குறைந்து, 1921.50 டாலராக காணப்படுகின்றது. இது கடந்த அமர்வின் முடிவு விலையை காட்டிலும், இன்று சற்று மேலாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. ஆக மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையில் வெள்ளி விலை

தங்கம் விலையை போலவே, வெள்ளியின் விலையும் சற்று குறைந்தே காணப்படுகிறது. தற்போது அவுன்ஸூக்கு 0.68% குறைந்து, 24.367 டாலர்களாக வர்த்தகமாகி வருகின்றது. வெள்ளி விலையும் கடந்த அமர்வின் முடிவு விலையை விட, இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. கடந்த அமர்வின் குறைந்த விலையையும் உடைத்துள்ளது. இதற்கிடையில் வெள்ளி விலையும் மீடியம் டெர்மில் சற்று சரிவினைக் காணலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது.

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையில் தங்கம் விலை

இந்திய சந்தையினை பொறுத்தவரையில், தங்கம் விலையானது சர்வதேச சந்தையின் எதிரொலியாக சரிவிலேயே காணப்படுகின்றது. தற்போது 10 கிராமுக்கு 15 ரூபாய் குறைந்து, 51,356 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இதுவும் கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று தொடக்கத்தில் சற்று மேலாக தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் அதிகபட்ச, குறைந்தபட்ச விலையை உடைக்கவில்லை. எப்படியிருப்பினும் தங்கம் விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

இந்திய சந்தையில் வெள்ளி விலை

இந்திய சந்தையில் வெள்ளி விலை

சர்வதேச சந்தையின் எதிரொலியாக இந்திய சந்தையிலும் வெள்ளி விலையானது சற்று குறைந்தே காணப்படுகின்றது. இது தற்போது கிலோவுக்கு 200 ரூபாய் குறைந்து, 65,998 ரூபாயாக வர்த்தகமாகி வருகின்றது. இது கடந்த அமர்வின் முடிவினை காட்டிலும், இன்று சற்று கீழாகவே தொடங்கியுள்ளது. எனினும் கடந்த அமர்வின் குறைந்தபட்ச விலையையும் உடைத்துள்ளது. இது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகிறது.

ஆபரண தங்கம் விலை

ஆபரண தங்கம் விலை

சர்வதேச சந்தையில் தங்கம் விலையானது சற்று குறைந்திருந்தாலும், ஆபரணத் தங்கத்தின் விலையானது மாற்றமின்றி சற்று அதிகரித்து காணப்படுகின்றது. தற்போது சென்னையில் கிராமுக்கு 13 ரூபாய் அதிகரித்து, 4816 ரூபாயாகவும், இதே சவரனுக்கு 104 ரூபாய் அதிகரித்து, 38,528 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

தூய தங்கம் விலை

தூய தங்கம் விலை

சென்னையில் இன்று தூய தங்கத்தின் விலையானது கிராமுக்கு 14 ரூபாய் அதிகரித்து, 5254 ரூபாயாகவும், இதுவே 8 கிராமுக்கு 112 ரூபாய் அதிகரித்து, 42,032 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 52,540 ரூபாயாகவும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.

வெள்ளி விலை

வெள்ளி விலை

இதே சென்னையில் இன்று ஆபரண வெள்ளியின் விலையானது பெரியளவில் மாற்றமின்றி சற்று குறைந்து காணப்படுகின்றது. இன்றும் கிராமுக்கு 40 பைசா குறைந்து, 71 ரூபாயாகவும், இதுவே 10 கிராமுக்கு 710 ரூபாயாகவும், இதுவே கிலோவுக்கு 400 ரூபாய் குறைந்து, 71,000 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது. இதுவரையில் விலையில் மாற்றமில்லை.

இன்று என்ன செய்யலாம்?

இன்று என்ன செய்யலாம்?

தங்கம் மற்றும் வெள்ளி விலையானது மீடியம் டெர்மில் சற்று குறையலாம் எனும் விதமாகவே காணப்படுகின்றது. ஆக நீண்டகால நோக்கில் சற்று பொறுத்திருந்து வாங்கலாம். இது பணவீக்கம், ஃபெடரல் வட்டி விகிதம், டாலர் மதிப்பு, பத்திர சந்தை, ரஷ்யா – உக்ரைன் பேச்சு வார்த்தை உள்ளிட்ட பல காரணிகள் விலையில் முக்கிய மாற்றத்தினை ஏற்படுத்தலாம். ஆபரணத் தங்கத்தினை பொறுத்தவரையில் தேவையிருக்கும் பட்சத்தில் வாங்கி வைக்கலாம்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

gold price on April 6th, 2022: gold prices today down for 4th day in a row in MCX

gold price on April 6th, 2022: gold prices today down for 4th day in a row in MCX /தங்கம் விலை 4வது நாளாக சரிவு.. முதலீட்டாளர்கள் கொண்டாட்டம்..!

Story first published: Wednesday, April 6, 2022, 11:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.