இந்திய ஐடி நிறுவனங்கள் கடந்த இரண்டு வருடமாக அதிகப்படியான திட்டங்களை வெளிநாடுகளில் இருந்து பெற்று வருகிறது. இந்நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் சக போட்டி நிறுவனமான இன்போசிஸ், விப்ரோ, ஹெச்சிஎல், அக்சென்சர், காக்னிசென்ட் ஆகியவற்றை வியப்பில் ஆழ்த்தும் வகையில் அமெரிக்காவில் ஒன்னு, கனடாவில் ஒன்னு.. என இரு முக்கிய திட்டங்களை கைப்பற்றியுள்ளது.
இதன் மூலம் டிசிஎஸ் நிறுவனம் பல பில்லியன் டாலர் அளவிலான வருமானத்தை பெறுவது மட்டும் அல்லாமல் பல ஆண்டுக்கான வர்த்தகத்தையும் பெற உள்ளது. இது டிசிஎஸ் நிறுவனத்திற்கு மிகப்பெரிய ஜாக்பாட் ஆக அமைந்துள்ளது.
டிஜிட்டல் சேவை
கொரோனா தொற்று பாதிப்புக்கு பின்பு அனைத்து வர்த்தக துறையும் டிஜிட்டல் சேவைக்கு அதிகப்படியான முதலீட்டை செய்து வருகிறனர். இதற்கு முக்கிய காரணம் லாக்டவுன் அறிவிக்கப்பட்ட காலத்தில் டிஜிட்டல் சேவைகள் இல்லாத காரணத்தால் வீட்டில் இருந்த பணியாற்ற முடியாத பல துறைகள் அதிகளவிலான வர்த்தகத்தை இழந்தது.
நெருக்கடிகள்
இதுபோன்ற நெருக்கடி மீண்டும் வந்தால் அதில் இருந்து தப்பிக்கவே தற்போது அனைத்து துறை நிறுவனங்களும் தங்களது சேவை மற்றும் பணிகளில் அதிகப்படியான டிஜிட்டல் சேவைகளை உட்படுத்தி வருகிறது.
இந்திய ஐடி நிறுவனங்கள்
ஐடி சேவை வழங்குவதில் இந்திய ஐடி நிறுவனங்கள் முன்னோடியாக இருக்கும் இதேவேளையில் பிற நாட்டு நிறுவனங்களை காட்டிலும் மிகவும் குறைவான தொகையில் சேவை வழங்கும் காரணத்தால் கடந்த 2 வருடத்தில் ஐடி நிறுவனங்கள் அதிகப்படியான திட்டங்களை பெற்று வருகிறது.
டிசிஎஸ் மாஸ்
இந்நிலையில் நாட்டின் மிகப்பெரிய ஐடி சேவை நிறுவனமான டிசிஎஸ் சக இந்திய ஐடி சேவை நிறுவனங்கள் உடனான போட்டியில் அனைவரையும் ஓரம்கட்டி அமெரிக்காவில் ஒரு திட்டத்தையும், கனடாவில் புதிதாக ஒரு திட்டத்தையும் கைப்பற்றியுள்ளது.
கனடா திட்டம்
கனடா நாட்டின் மிகப்பெரிய பேமெண்ட் நிறுவனமான பேமெண்ட்ஸ் கனடா நிறுவனத்தின் தொழில்நுட்ப மேம்பாடுகள் செய்யவும் குறிப்பாக ரியல் டைர் ரெயில் (RTR) சேவையை கொண்டு வரவும் டிசிஎஸ் ஒப்பந்தம் செய்துள்ளது. இந்த மேம்பாடு மூலம் சில நொடிகளில் பேமெண்ட்-ஐ பெற முடியும்.
பேமெண்ட்ஸ் கனடா நிறுவனம்
பேமெண்ட்ஸ் கனடா நிறுவனத்தின் இந்த தொழில்நுட்ப மேம்பாடு மூலம் சரக்கு மற்றும் சேவை, பண பரிமாற்றம் என அனைத்திலும் நொடிகளில் பரிமாற்றங்கள் சாத்தியப்படுத்த முடியும். இதன் மூலம் கனடா நாட்டின் டிஜிட்டல் பண பரிமாற்றத்தில் புதிய மாற்றம் ஏற்பட உள்ளது.
அமெரிக்கா
இதே தொடர்ந்து டிசிஎஸ் அமெரிக்காவின் மிகப்பெரிய நிறுவனத்துடனான கிளவுட் டிரான்ஸ்பார்மேஷன் பணிகளை செய்ய பல ஆண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்தாகி இருப்பதாக அறிவித்துள்ளது. இதன் மூலம் ஏற்கனவே இருக்கும் கூட்டணி இப்புதிய ஒப்பந்தம் மூலம் தொடர உள்ளது என பங்குச்சந்தையில் தெரிவித்துள்ளது. ஆனால் நிறுவனத்தின் பெயரை அறிவிக்கவில்லை.
TCS: New partnership with Payments Canada, multi-year contract with large American company
TCS: New partnership with Payments Canada, multi-year contract with large American company தட்டி தூக்கிய டிசிஎஸ்.. அமெரிக்காவில் ஒன்னு, கனடாவில் ஒன்னு.. வியப்பில் இன்போசிஸ்..!