சென்னை: உள் தமிழக மாவட்டங்கள் மற்றும் டெல்டா மாவட்டங்களில், ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது.
இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது: உள் தமிழகப் பகுதிகளின் மேல் நிலவும் வளி மண்டல கீழடுக்கு சுழற்சி மற்றும் வெப்பச்சலனம் காரணமாக, உள் தமிழகமாவட்டங்கள், டெல்டா மாவட்டங்கள், குமரி, நெல்லை, தூத்துக்குடி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்யும். 7-ம் தேதி முதல்9-ம் தேதி வரை தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் மித மான மழை பெய்யக் கூடும்.
சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 95 டிகிரி பாரன்ஹீட்டாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 80 டிகிரி பாரன்ஹீட்டாகவும் இருக்கும். இவ்வாறு ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.