தமிழக சட்ட பேரவையில் இன்று, சோழவந்தான் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடேசன் கேள்வி ஒன்றை எழுப்பினார்.
அதில் சோழவந்தான் பகுதியிலுள்ள கல்வேலிப்பட்டி, கொண்டையம்பட்டி மற்றும் இடையப்பட்டி ஆகிய இடங்களில் துணைமின் நிலையம் அமைப்பதற்கு அரசு நடவடிக்கை எடுக்குமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி பதில் அளிக்கையில்,
“பத்து மாதங்களில் 216 துணை மின் நிலையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தெரிவித்திருந்தார். இதன் அடிப்படையில் 193 துணை மின் நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. மீதம் உள்ள 23 துணை மின் நிலையங்கள் அமைப்பதற்கான பணிகள் நடந்து கொண்டு வருகிறது.
பத்து மாதங்களில் 625 கோடி ரூபாய் செலவில் 8,905 இடங்களுக்கு மின்மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டிற்குள் அனைத்து துணை மின் நிலையங்களும் அமைக்கப்படும்”. என்று மின்சாரத் துறை அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார்.