தென்னிந்திய திரைத்துறை ஒன்றுகூடும் CII-யின் தக்‌ஷின் 2022 உச்சிமாநாடு!

இந்திய தொழில்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Industry – CII) நடத்தும் இரண்டு நாள் தக்‌ஷின் 2022 உச்சிமாநாடு ஏப்ரல் 9 & 10, 2022 தேதிகளில் சென்னை டிரேட் சென்டரில் நடைபெறவுள்ளது.வருங்கால சந்ததிகளுக்கு தென்னிந்திய ஊடகம் மற்றும் பொழுதுபோக்குத் துறை சம்பந்தப்பட்ட வழிகாட்டல் நிகழ்ச்சியாக இருப்பதுடன், இத்துறையின் அடுத்தகட்ட நகர்வுகள் பற்றி இந்த மாநாட்டில் அறிந்துகொள்ள முடியும் என்று விழா அமைப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.மாநாட்டின் முக்கிய அம்சமாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமான் அவர்களுக்கு சிறப்பு விருது வழங்கப்படவுள்ளது. இம்மாநாட்டை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் அவர்கள் துவக்கி வைக்கிறார்.

திரைத்துறையின் சங்கமம்ஒரு திரைப்படம் எப்படி உருவாகுகிறது, அதன் நோக்கம், திட்ட அமைப்பு, தொழில்நுட்ப முக்கியத்துவம் போன்ற பல அம்சங்களை விளக்கும் வகையிலான பல சுவாரஸ்யமான கருத்தரங்குகள் மற்றும் உரையாடல்கள் தக்ஷின் 2022 மாநாட்டில் இடம்பெறுகின்றன. திரைத்துறை மாணவர்கள் மற்றும் திரைத்துறையில் ஆர்வமுள்ள எவருக்கும் மிகுந்த பயனளிக்கும் மாநாடாக இது இருக்கவிருக்கிறது. சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனர் திரு.டி.ஜி. தியாகராஜன், ஜெயம் ரவி, இயக்குநர் எஸ் எஸ் ராஜமௌலி, இயக்குநர் மணிரத்னம் உள்ளிட்ட பிரபலங்கள் முதல் நாள் தொடக்க விழாவில் கலந்து கொள்ளவுள்ளனர்.

மேலும், சுஹாசினி மணிரத்னம், குஷ்பு, டாப்ஸி பன்னு, பாடலாசிரியர் தாமரை, இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ், இயக்குனர் லோகேஷ் கனகராஜ், ராதிகா சரத்குமார், திரி விக்ரம் ஶ்ரீநிவாஸ், ஜி.தனஞ்செயன், ஒளிப்பதிவாளர் செந்தில்குமார், கலை இயக்குநர் சாபு சிரில், ஶ்ரீனிவாச மோகன், விஷுவல் எஃபெக்ட்ஸ் துறை மேலாளர், ரம்யா ரீமா கலிங்கல்,விகடன் நிர்வாக இயக்குநர் பா. ஸ்ரீநிவாசன், உள்ளிட்ட பல பிரபலங்கள் தக்ஷின் 2022 மாநாட்டில் கலந்துகொள்கின்றனர்.

முதல் நாள் கருத்தரங்குகள்

பன்னிந்திய திரைப்படம் எடுப்பது எப்படி? எடுத்துக்காட்டாக திகழும் தென்னிந்தியா | வருங்கால திரை ஊடகம் | ஊடகத் துறையில் பாலினம் | திரைத்துறையில் சமூக வலைதளங்களின் தாக்கம் | அச்சுத்துறையின் மீட்சி |

திரைத்துறை சார்ந்த ஸ்டார்ட் அப்ஸ்…

இரண்டாம் நாள் கருத்தரங்குகள்

பட்ஜெட் படங்கள் எடுப்பது எப்படி? | தற்போதைய சூழலில் தொலைக்காட்சி சந்தித்து வரும் சவால்கள் | மில்லேனியல்களுக்கு கதை சொல்லும் கலை | ஓடிடி புரட்சி | தியேட்டர்கள் எவ்வாறு மீண்டு வருகின்றன? | கன்டென்ட்டை விற்பனை செய்தல் மற்றும் கொள்கைகள் | இயக்குநர்கள் மணிரத்னம் மற்றும் கவுதம் வாசுதேவ் மேனன் கலந்துரையாடல்

இரண்டாம் நாளின் இறுதி நிகழ்வாக இசைப்புயல் ஏ.ஆர்.ரகுமானுக்கு சிறப்பு கௌரவம் வழங்கப்படவுள்ளது.

இந்த மாபெரும் திரைத்துறை நிகழ்வில் நீங்களும் கலந்துகொண்டு பயனுள்ள கருத்தரங்குகளைக் காண உங்கள் பெயரை இப்போதே பதிவு செய்யவும். மேலும் தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.