உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் cctv காட்சிகள் வெளியாகி உக்ரைனில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
உக்ரைனின் புச்சா நகரில் அத்துமீறி நுழைந்த ரஷ்ய ராணுவம் அங்குள்ள பொதுமக்களை கொடூரமாக சித்திரவதை செய்து கொலை செய்து இருப்பதாக உக்ரைன் அரசு தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.
மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த அத்துமீறலுக்கு உலக நாடுகள் பலவும் கண்டனம் தெரிவித்ததுடன், பொருளாதார தடைகளையும் விதித்து ரஷ்யாவின் செயலுக்கு எதிராக நடவடிக்கையையும் எடுத்து வருகின்றனர்.
The occupiers fired at the residential areas of #Severodonetsk. pic.twitter.com/FJpXRDJAUw
— NEXTA (@nexta_tv) April 6, 2022
ஆனால், உலக நாடுகள் மற்றும் உக்ரைனின் குற்றச்சாட்டுக்கு ரஷ்யா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வருகிறது.
இந்தநிலையில், உக்ரைனின் செவரோடோனெட்ஸ்க் பகுதியில் சாலையில் நின்று கொண்டிருந்த பொதுமக்கள் மீது ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் தாக்குதல் நடத்தி இருக்கும் cctv காட்சிகள் வெளியாகி உலக நாடுகளை மேலும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
இந்த காணொளி காட்சியில், சாலையில் நடந்து நின்று கொண்டிருந்த நபர்கள் ராணுவ துருப்புகள் வருகையை கண்டு அலறி அடித்து கொண்டு ஓடவே அவர்கள் மீது ரஷ்ய ஆக்கிரமிப்பாளர்கள் டாங்கி தாக்குதல் நடத்தியுள்ளனர்.
மேலும் ரஷ்ய ராணுவத்தின் இந்த தாக்குதல் அங்குள்ள cctv கமெராவில் பதிவாகி ரஷ்யாவின் போர் விதிமீறலுக்கு எதிரான சாட்சியாக மாறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஜெலன்ஸ்கியை கொல்லும் திட்டம் இல்லை: டிமிட்ரி பெஸ்கோவ் அறிவிப்பு!