வீடுகள் தோறும் பைபர் ஆப்டிக் கேபிள் மூலம் அதிவேக இண்டெர் நெட் மற்றும் கேபிள் டிவி இணைப்புகள் கொடுக்க சரியான கொள்கையை மத்திய அரசு வகுக்க வேண்டும் என திமுக எம்பி தயாநிதிமாறன் மக்களவையில் வலியுறுத்தினார்.
அதிவேக இணைய வசதியை மக்கள் வீடுகளில் எதிர்பார்க்கின்ற நிலையில், தொலைத்தொடர்பு மற்றும் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மூலம் பைபர் லைன்களை கொடுப்பதற்கு தேவையான வழித்தட உரிமை பெறுவது பெரும் சவாலாக உள்ளதாக அவர் தெரிவித்தார்.
எனவே வழித்தட உரிமை பெறுவதற்கு நாடு முழுவதும் ஒரே மாதிரியாக கொள்கையை உருவாக்க வேண்டும் எனவும் தயாநிதிமாறன் கோரிக்கை விடுத்தார்.
இதற்கு பதிலளித்த மத்திய தொலைதொடர்புத் துறை அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ், எற்கனவே 12 மாநிலங்கள் மத்திய அரசின் கொள்கையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும், சில மாநிலங்களில் வழித்தட உரிமை கட்டணம் கிலோ மீட்டருக்கு 25 லட்சம் ரூபாய் என்ற அளவில் உள்ள நிலையில் அதனை குறைக்க அந்த மாநிலங்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.