எத்தியோப்பியாவில் நிலவும் வறட்சியால் 70 லட்சம் பேர் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில் தங்கும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர்.
சோமாலி மாநிலத்தில் பருவமழை பொய்த்ததால், உணவு மற்றும் குடிநீர் இன்றி 10 லட்சத்துக்கும் மேற்பட்ட கால்நடைகள் உயிரிழந்தன.
அங்கு வசிக்கும் 80 சதவீத மக்களின் வாழ்வாதாரம் கால்நடைகளை சார்ந்துள்ளதால் ஏராளமானோர் அரசு வழங்கும் உணவு மற்றும் குடிநீருக்காக முகாம்களில் குடியேறி வருகின்றனர்.
அவ்வாறு குடியேறுவோரின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரிப்பதால் அங்கும் உணவுத் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது.