பாடசாலைகளுக்கு 3ஆம் தவணை விடுமுறை

அரச மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் 2021 ஆம் கல்வியாண்டின் 3ஆம் தவணை நேற்றுடன் (06) நிறைவடைவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..

இதுதொடர்பாக கல்வி அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில சீ.கே. பெரேரா வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்
ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ள சுற்றறிக்கைக்கு அமைய, 2021 கல்வி ஆண்டிற்கான 3ஆம் தவணை பாடசாலை விடுமுறை எதிர்வரும் வெள்ளிக்கிழமை (08) நிறைவு செய்யப்படவிருந்த நிலையில் தற்போது அதனை நேற்றுடன் நிறைவு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை அனைத்து கத்தோலிக்க பாடசாலைகளுக்கும் நேற்றுடன் விடுமுறை வழங்கப்படுவதாக, ஆயர் இல்லம் அறிவித்துள்ளது.

அதற்கமைய, 2022 கல்வி ஆண்டுக்கான முதலாம் தவணை ஏப்ரல் 18ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளது.

இதேவேளை, முஸ்லிம் பாடசாலைகள் புனித ரமழான் நோன்பு காரணமாக ஏற்கனவே விடுமுறை வழங்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.

எதிர்வரும் ஏப்ரல் 18ஆம் திகதி முதல் பாடசாலை நேரத்தை ஒரு மணித்தியாலத்தால் அதிகரிக்க கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது.குறிப்பிடத்தக்கது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.